இறங்கு வரிசையில் எண்ணுதல் Jeffersonville, Indiana, USA 62-09-09M 1. நன்றி, சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் எப்பொழுதுமே அவசரமாக இங்கு வருகிறேன். நான் இப்பொழுது தான் உள்ளே வந்தேன். சகோ. மூர், அவர்களுடைய பெந்தெகொஸ்தே ஐம்பதாம் ஆண்டு விழாவில் நான் கலந்துகொள்வதைக் குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். மற்ற இடத்தில் வர்த்தகருக்கு நான் கொடுத்த தேதிகளை நினைவுக்கு கொண்டுவர முயன்று கொண்டிருந்தேன். நான் சொன்னேன்... நான் தொலைபேசியை மறுபக்கம் திருப்பி, “”நம்பிடுவாய்' என்னும் பாடல் கேட்கிறதா? அதன் அர்த்தம் என்னவென்று உமக்குத் தெரியும்“ என்று சொல்லிவிட்டு, அவர் பில்லியிடம் பேசும்படி தொலைபேசியைக் கொடுத்துவிட்டு ஓடி வந்தேன். எனவே அவர்கள் எப்படி வருவார்களென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது... எனக்கு லூயிசியானாவுக்கு, அங்குள்ள தென்பாகத்தினரிடம் செல்ல மிகவும் பிரியம். ஆனால் அதே தேதிகளில் நான் பிளாரிடாவில் நடக்கும் வர்த்தகர் கன்வென்ஷனில் கலந்து கொள்ளவேண்டும். ஒரு நொடியில் இவைகளை ஒன்றாக இணைத்துப் பார்ப்பதென்பது மிகவும் சிக்கலாக உள்ளது. 2 நாமெல்லாரும் உயிருள்ளவர்களாக இன்று காலை “ஆமென் என்று சொல்லக் கூடியவர்களின் மத்தியில் வந்திருப்பதைக் குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறோம். அது உண்மை. இங்கு நாம் நெருக்கமாக இருப்பதைக் குறித்து வருந்துகிறேன். சிலர் இங்கு வந்து இடமில்லாத காரணத்தால் திரும்பிப் போய்விட்டதாக அவர் என்னிடம் கூறினார். ஆனால் நாங்கள்... தற்பொழுது எங்களால் செய்யக் கூடியது இதுதான். நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் பேசுவது இந்த ஒலிபெருக்கியின் வழியாக நன்றாகக் கேட்கிறதா, அல்லது இதன் வழியாகவா? இங்குள்ள இதன் வழியாகவா? நல்லது. அதை இங்கு என் அருகில் கொண்டு வாருங்கள். (இங்குள்ளது ஒலிப்பதிவுக்காக, சரி, சரி, ஐயா.) 3 நல்லது, நேற்றிரவு ரசித்தீர்களா? நான்... நாம் நிச்சயம் அதைப் பெற்றுக்கொண்டோம், கர்த்தர் நம்மை ஆசீர்வதித்தார். செய்தியைக் குறித்து இன்னும் எத்தனையோ காரியங்களை அங்கு கூறியிருக்கலாம், ஆனால் நீங்கள் ஆழ்ந்து படித்து, மறைந்துள்ள காரியங்களை அறிந்துகொண்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று எண்ணினேன். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம், அதை நான் விசுவாசிக்கிறேன். இயேசு திரும்ப வருவதாக வாக்களித்த முதற்கொண்டு ஒவ்வொரு வரும் அவ்விதம் நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால், இந்நாட்களில் ஒன்றில் அவர் எப்படியும் வரப்போகிறார் என்று உங்களுக்குத் தெரியும், பாருங்கள். எனவே நடக்க வேண்டியது இனி ஒன்றுமில்லை, சபை எடுத்துக்கொள்ளப்படுதல் மாத்திரமே. 4 இன்று காலை நான் இறங்கு வரிசையில் எண்ணுதல் என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். அந்த செய்தியை நாம் அணுகுவதற்கு முன்பு. இப்பொழுது நாம்... இன்றிரவு ஆராதனையை நினைவில் கொள்ளுங்கள், அப்பொழுது அவருடைய சமூகத்தில் வாழுதல் என்பது செய்தியாயிருக்கும். பாருங்கள்? நாம் வேகமாக முடிக்க பிரயாசப்படுவோம். அப்பொழுது நீங்கள் வீட்டுக்குச் சென்று திங்கள் காலை வேலைக்குச் செல்ல முடியும். உங்கள் அனைவருக் காகவும் நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள் இல்லாமல் நாங்கள், நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இல்லாமல் என்னால் செல்லவே முடியாது. 5 அந்த சகோதரி வில்லியம்ஸுக்கு என் விசேஷித்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவர்களை எனக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். இன்று காலை நான் எழுந்தபோது, என்னே, சகோ.சார்லீ காக்ஸ் அங்கிருந்தார். வாசற்படியில் நிறைய ஆகாரம், டப்பியில் அடைத்து மூடப்பட்ட ஆகாரம் போன்றவை இருந்தன. அந்த ஏழை ஸ்திரீ இந்த கோடை காலத்தில், தக்காளிப் பழங்களையும் மற்ற ஆகாரத்தையும் டப்பியில் அடைத்து மூட எவ்வளவாக வியர்வை சிந்தி பாடுபட்டிருக்க வேண்டும்! இது எனக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது! சகோதரி வில்லியம்ஸ், ஜெபம் செய்யப்படுவதற்காக அவர்கள் உங்கள் வேதாகமத்தை அங்கு வைத்துவிட்டு சென்றனர். இன்று காலை நான் அறையில் செய்தியை ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது, தேவன் அந்த வேதாகமத்தில் அடங்கியுள்ளவைகளை எடுத்து உங்கள் இருதயத்தில் பதியச் செய்யவேண்டுமென்று ஜெபித்தேன். தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். சகோதரியே, இதற்கான விலைக்கு நான் உங்களுக்கு பணம் கொடுத்தால் நலமாயிருக்கும். இதைத் தயாராக்க நீங்கள் நிச்சயம் வியர்வை சிந்தி அதிக பாடுபட்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! அவ்விதம் கூறிவிடுவது மிகவும் எளிது, ஆனால் உங்களுக்கு ஒரு வேதவசனத்தை அளிக்க விரும்புகிறேன். நேற்றிரவு நான் கூறினது போன்று, அது ஒருபோதும் தவறாது. அதை நாம் அறிந்திருக்கிறோம். “இச்சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைக் செய்தீர்களோ'' என்று இயேசு கூறினார்.”என்னை சேர்ந்த சிறியோராகிய இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.'' அவருடைய கரங்களில் இதை நீங்கள் கொடுத்திருந்தால், அது எவ்விதம் உங்களுக்குத் திரும்ப வருமோ, அதேவிதமாக அது உங்களுக்குத் திரும்ப வருவதாக. இதற்காக தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 6 உங்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்லுகிறேன். நீங்கள் இங்குள்ளபோது, தசமபாகங்களையும் மற்றவைகளையும் செலுத்துவதாக நான் காண்கிறேன். அது தேவனுடைய ராஜ்யத்துக்காக செலவிடப்படும் என்று நீங்கள் எங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையாகும். இதற்கு நாங்கள் பொறுப்பாளிகள். பாருங்கள் இதற்கு நாங்கள் கணக்கொப்புவிக்க வேண்டும். எனவே நாங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் கவனமாயிருந்து, கர்த்தர் விரும்புகிற விதமாக, எங்கள் ஒவ்வொரு அசைவும் பரிபூரணமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஏனெனில் அவர் எந்த நேரத்தில் எங்களை அழைப்பாரோ என்று எங்களுக்குத் தெரியாது. அப்பொழுது நாங்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் அவருக்கு கணக்கொப்புவிக்க வேண்டும். அதன் காரணமாகத் தான் பவுல், நாம் நேற்றிரவு பார்த்ததுபோல், ஒரு அங்கியை மாத்திரம் வைத்திருந்தான். பாருங்கள்? அவன் அதிக அங்கிகளை வைத்திருக்க முடியும், ஆனால் அவன் அவ்விதம் செய்யவில்லை. அவனால் ஒரு நேரத்தில் ஒரு அங்கியை மாத்திரமே உபயோகிக்க முடியும், எனவே அவன் ஒன்றை மாத்திரமே வைத்திருந்தான். அவன் உலகத்தின் ஐசுவரியங்களுக்காக கவலைப்படவில்லை. அவன் புகழுக்காக கவலைப்படவில்லை, நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு விளங்கும் இன்றைய மகத்தான மத சம்பந்தமான அசைவுகளில் ஜனங்கள் செய்வதுபோல். எத்தனையோ ஜனங்கள்... 7 இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதென்று எனக்குத் தெரியும். இங்கு நான் கூறுபவை, இந்த சபைக்கு மாத்திரமல்ல, உலகம் முழுவதற்கும். நான்... ஏனெனில் இந்த ஒலிநாடாக்கள் அநேக தேசங்களுக்குச் செல்கின்றன, இவைகளை அவர்கள் ஆப்பிரிக்காவிலுள்ள பழங்குடியினரிடத்திலும் கூட கொண்டு செல்கின்றனர். போதகர் அதை அங்கு கொண்டு சென்று, இந்த ஒலிநாடாக்களில் அடங்கியுள்ள செய்திகளை, வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத அந்த ஜனங்களுக்கு மொழிபெயர்த்து தருகிறார். பாருங்கள்? இது ஆஸ்திரேலியாவின் உட்பிர தேசங்களுக்கும் செல்கிறது. இந்த பழங்குடியினருக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் சாப்பிடும் ஒன்றே ஒன்று.... அவர்கள் சர்க்கரையைப் பெறும் முறை என்னவெனில், அவர்கள் ஒரு ஓட்டை எடுத்து, ஒரு கூட்டம் தேனீக்களைத் தோண்டி எடுத்து, அவைகளின் முதுகை கடித்தெறிவதே. இப்படித்தான் அவர்கள் சர்க்கரையைப் பெறுகின்றனர். அவர்கள் உடை உடுக்காமல், நிர்வாணிகளாயுள்ளனர். அவர்கள் ஒரு கங்காருவைப் பிடித்து, குடல் ஒன்றையும் சுத்தம் செய்யாமல், அதை நெருப்பின் மேலிட்டு, சிறிது பொசுக்கி அதை புசிக்கின்றனர். அப்படித்தான், அது பயங்கரமானது. இந்த ஒலிநாடாக்கள் அவர்கள் மத்தியில் போடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிற செய்தி நூற்றுக்கணக்கான மிஷனரிமார்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, போடப்பட்டு, ஜனங்களுக்கு மொழிபெயர்த்து தரப்படுகிறது. எனவே, பாருங்கள், நியாயத்தீர்ப்பின் நாளில் நான் அங்கு செல்லும்போது, என்மேல் எவ்வளவு பெரிய உத்திரவாதம் உள்ளதென்பதை சிந்தித்துப் பாருங்கள்! நான் யாரையாவது தவறாக நடத்தியிருந்தால்? பாருங்கள்? பார்த்தீர்களா? இந்த ஆத்துமாக்களில் ஒன்றையாவது நான் தவறான பாதையில் நடத்தியிருந்தால், என் கதி என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள்! 8 எனவே நான் இந்த ஸ்தாபனங்களிலுள்ள என் சகோதரன் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்க வேண்டும். அவர்களில் அநேகர் அருமையானவர்கள், பெரும்பாலோர். அதைக்குறித்து எனக்கு மகிழ்ச்சி. ஆனால் அவர்களில் சிலர்... வழக்கமாக தலைவர்கள் அதை இணைத்து, அதை, ஓ, ஒரு அரசியலை நுழைத்து விடுகின்றனர். அதன் விளைவாக அவர்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகுகின்றனர். நான் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும். நான் அதில் நிலைத்திருக்க வேண்டும். அந்த நிலைக்கு அது வரவேண்டும். அதனுடன் நான் அசைய வேண்டும், அவ்வளவுதான். எனவே நாம்... உங்களுக்குத் தெரியுமா, “காலம் என்னும் ஓடையில் நாம் மிதந்து செல்கிறோம், நாம் நீண்ட நாள் தங்கியிருக்கப் போவதில்லை” என்னும் சிறு பாடலை நாம் பாடுவதுண்டு. அதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். “புயலடிக்கும் இருள் மேகங்கள் பிரகாசிக்கும் நாட்களாக மாறும். அது உண்மை . ''நாம் அனைவரும் தைரியம் கொள்வோம், ஏனெனில் நாம் தனியே விடப்பட்டிருக்கவில்லை.'' அது உண்மை. ”இரத்தினங்களை சேகரித்து வீடு கொண்டு செல்ல காப்பாற்றும் படகு (life boat) விரைவில் வருகின்றது.'' அந்த நேரத்தில் தான் கிழிந்துபோகாத அங்கியை, நித்தியமான ஒன்றை, நான் பெறுவேன் என்று எதிர்பார்க்கிறேன். நான் தேவனுக்கு உண்மையுள்ளவனாக இருந்து, அங்கு செல்லும்வரைக்கும், பூமியிலுள்ள காரியங்களின் மேல் கவனம் செலுத்தாமல் இருக்கவேண்டும். அதன் பிறகு நாம்... அவைகளே நீடித்து நிற்கும். 9 எனவே நான் இந்த முப்பது... இந்த ஊழியத்திற்கு நான் வந்து முப்பத்து இரண்டு ஆண்டுகளாக போகின்றன. நான் வார்த்தையில் உண்மையாய் நிலைத்திருக்க முயன்று வந்திருக்கிறேன். ஒன்றையுமே மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை, ஏனெனில், அதை நான் வேதாகமத்திலிருந்து படித்து, வேதாகமம் கூறுவதையே கூறி வந்திருக்கிறேன். எனவே அதை வாபஸ் வாங்கிக்கொள்ளவோ, அல்லது அதை மாற்றி அமைக்கவோ எனக்கு அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் வேதம் உரைத்த விதமாகவே நானும் உரைத்தேன். நான் கண்டு கொண்டது என்னவெனில், தேவன் ஒன்றை உரைத்திருப்பாரானால், அது நிறைவேறுவதற்கு அந்த வார்த்தையோடு நான் செல்ல வேண்டும். அதை நாம், எனக்கு அண்மையில் உண்டான தரிசனத்தைக் குறித்து நேற்றிரவு நான் உங்களிடம் எடுத்துரைத்த போது... கண்டோம். நான் அங்கு இருக்க வேண்டியதாயிருந்தது. அவர் இடத்திலே நான் இருக்க வேண்டுமென்று ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. “அவர்களுடன் செல்' என்று எனக்குக் கூறப்பட்டது (மூன்று முறை). நான் அந்த மனிதர்களுடன் நடந்து சென்றேன். அந்த தரிசனம் அந்தப்படியே நிறைவேறினது. தேவனுடைய பாகம், நான் அங்கு நின்றுகொண்டிருந்தவனாக விடப்பட்டேன். எனவே நாம் வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதை நினைவுகூர விரும்புகிறோம். வார்த்தையில் நிலைத்திருங்கள். வார்த்தை உங்களை எங்கு நடத்துகிறதோ, நீங்கள் வார்த்தையுடன் செல்லுங்கள். அப்பொழுது அது உங்களை சரியாகக் கொண்டுவரும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். 10 நீங்கள் இங்கு எட்டு மணி முதற்கொண்டு இருக்கிறீர்கள் என்றறிவேன், இப்பொழுது ஏறக்குறைய பத்து மணி இருக்கும். எனவே இப்பொழுது நாம் நமது கர்த்தரிடம் ஜெபத்தை ஏறெடுப்போம். விசேஷித்த விண்ணப்பங்கள் ஏதாகிலும் உண்டா? இங்கு நிறைய உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறேன். விண்ணப்பங்கள் இருந்தால் கைகளை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது அவர். இதை அறிந்திருக்க அவரை நான் போதியகாலம் அறிந்திருக்கிறேன், அதாவது அவர் ஒவ்வொரு கரத்தையும் ஒவ்வொரு இருதயத்தையும் காண்கிறார், நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அவரிடத்தில் நம்முடைய வேண்டுதல்களைத் தெரியப்படுத்துவதே. நீங்கள் விசுவாசித்தால், அது நடக்கும். நாம் ஜெபிக்கும் போது நீங்கள் விசுவாசியுங்கள். 11 பரலோகப் பிதாவே, மாம்ச சரீரத்திலுள்ள மானிடர் என்னும் நிலைகளில் நாங்கள் தேவனுடைய மகத்தான சிங்காசனத்தை அணுகுகிறோம். இருப்பினும் எங்கள் குரல்கள் பேசும் வார்த்தைகள் எங்கோ வேறொரு பரிமாணத்தில் தேவன் அமர்ந்துள்ள அந்த மகத்தான சிங்காசனத்தை வந்தடைகின்றன. ஏனெனில் இயேசு, “என் நாமத்தினாலே நீங்கள் பிதாவை வேண்டிக்கொள்ளுவ தெதுவோ, அதை நான் செய்வேன்” என்று கூறியிருக்கிறார். நாம் சந்தேகப்படக் கூடாதென்றும், நாம் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்கிறோமோ அவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார். அவர், ''இந்த மலையைப் பார்த்து பெயர்ந்து போ' என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் நீங்கள் உரைத்தது நிறைவேறும் என்று விசுவாசித்தால், நீங்கள் கேட்டதை பெற்றுக்கொள்வீர்கள்'' என்று கூறியிருக்கிறார். பிதாவே, அது உண்மையென்று எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறோம், உமது வார்த்தையில் தவறு எதுவுமில்லை. எங்களால் அந்த நிலைக்கு வாழ முடியாததனால் எங்கள் விசுவாசம் அந்த நிலைக்கு உயர்த்தப்படாமல் நாங்கள் குழப்பமுற்று சந்தேகப்படுகிறோம். ஆனால் இன்று காலை கர்த்தாவே, நாங்கள் ஒரு புதிதான நம்பிக்கையுடன் கிறிஸ்துவின் ஜீவநாடியையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் இறுகப்பற்றிக் கொண்டவர்களாய் உம்மண்டை வருகிறோம். நாங்கள் இயேசுவின் நாமத்தின் மூலம் தேவனுடைய சமுகத்துக்கு வருகிறோம். கர்த்தவே, இன்று காலை உயர்த்தப்பட்ட கரங்களின் கீழ் உள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் நீர் அறிந்திருக்கிறீர். என் கரமும் உயர்த்தப்பட்டது. கர்த்தாவே, அது எப்பொழுதும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏனெனில் நான் தேவையுள்ள ஒருவன். நீர் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் அருள வேண்டுமென்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவர்களை நோக்கிப் பார்த்து, வாலிபர் முதல் வயோதிபர் வரை, சிறிய விண்ணப்பம் முதல் பெரிய விண்ணப்பம் வரைக்கும் உள்ள எல்லா விண்ணப்பங்களுக்கும் உத்தரவு அருளுவீராக. பிதாவே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் உத்தரவு அருளுவீராக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். கர்த்தாவே, என் விண்ணப்பத்தையும் நினைவுகூருவீராக. 12 எங்கள் சரீரங்களுக்கு நல்ல இளைப்பாறுதலைக் கொடுத்ததற்காகவும், உமது வார்த்தையைக்குறித்து நாங்கள் பெற்றுள்ள அறிவுக்காகவும், ஆவியைக் குறித்து எங்களுக்குள்ள புரிந்துகொள்ளும் தன்மைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு இன்னும் அதிகமான புரிந்துகொள்ளுதலைத் தரும்படியாக உம்மிடம் சதா வேண்டிக்கொள்கிறோம். இதைப் பெற்றுக்கொண்டதனால் நாங்கள் கர்வம் கொண்டவர்களாக இராமல் தாழ்மையுள்ளவர்களாக இருந்து, பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கென எங்களை உபயோகித்து, இந்நேரத்தில் நாங்கள் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் அவர் தாமே எங்களைப் பொருத்துவாராக. ஏனெனில் அது நடப்பதற்கு நாங்கள் சரியான ஸ்தானத்தில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கர்த்தாவே, அவ்விதம் நாங்கள் பொருத்தப்பட்டிருக்க விரும்புகிறோம். அது உண்ணும் மேசையினருகில் இருக்கும் வீட்டுப் பெண்மணியானாலும், அல்லது தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு நல்ல சாட்சியுடைவனாயிருந்தாலும், பிரசங்க பீடத்தின் மேலுள்ள ஒரு போதகராயிருந்தாலும், தர்மகர்த்தாவாயிருந்தாலும் டீக்கனாக இருந்தாலும், வகுப்பில் விவாதத்தில் கலந்துகொள்ளும் ஒரு இளைஞனாக இருந்தாலும், அது எங்கிருந்தாலும் நாங்கள் சரியான நேரத்தில் அங்கிருக்கும்படிச் செய்யும். ஏனெனில் நீர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், நீர் அவ்விதம் கூறியுள்ளதால் அது நிறைவேறும். எங்களுடைய விசுவாசம் அதில் கட்டப்பட்டுள்ளது. 13 இப்பொழுதும் கர்த்தாவே, எங்களுக்கு இன்னும் அதிக நாட்கள் இல்லையென்று நாங்கள் உணருகிறோம். அந்த நேரம் வந்து கொண்டிருக்கிறது, விண்வெளியிலிருந்து மூடுபனி வருகிறதை நாங்கள் உணருகிறோம். நியாயத்தீர்ப்பும் தேவனுடைய கோபாக்கினையும் விழ ஆயத்தமாயுள்ளது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அதன் விளைவுகளை நாங்கள் ஏற்கனவே உணர முடிகிறது. கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். கர்த்தாவே, இன்று காலை நான் அளிக்கவிருக்கும் இறங்கு வரிசையில் எண்ணுதல் என்னும் முப்பது நிமிடங்கள் கொண்ட இந்த செய்தியில் எனக்குதவி செய்யும். கர்த்தாவே, நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே, எங்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் போக்கி, இப்பொழுது எங்களைப் பரிசுத்தப்படுத்துவீராக. இன்று காலை இங்குள்ள ஒருவராவது இழக்கப்பட வேண்டாம், எல்லோருமே ஆயத்தமாயிருந்து, நாங்கள் மறுபுறத்தில் சந்திக்கும்போது அவர்கள் அந்த பெரிய வட்டாரத்தில் இருப்பார்களாக. அங்கு ஒவ்வொரு பெயராக அழைக்கப்படும்போது, “இதோ இருக்கிறேன்” என்று ஒவ்வொருவரும் கூறுவதை நான் கேட்பேனாக. கர்த்தாவே, அதைதான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கு வயோதிபர் ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமடைந்து என்றென்றைக்கும் இளைஞராயிருப்பார்கள். அவர்கள் அழியாதவர்களாய், அவருடைய சாயலில் நின்று கொண்டு, சூரியனையும் சந்திரனையும் விட அதிகமாகப் பிரகாசிப்பார்கள். தானியேல் உரைத்தது போல, “அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போல் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.'' ஆனால் நீர் தானியேல் தீர்க்கதரிசியிடம் கூறினது எங்கள் காதுகளில் விழுகிறது: ”நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு: நீ இளைப்பாறிக் கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்.“ ஓ தேவனே, இயேசுவின் இரத்தத்தின் மூலம் நாங்கள் தகுதியுள்ளவர்களாக எண்ணப்படுவோமாக. எங்களுக்குத் தகுதியுள்ளதாக நாங்கள் உரிமை கோரவில்லை, ஆனால் அவருடைய தகுதியின் மூலம் நாங்கள் அந்நாளில் நிற்க தகுதியுள்ளவர்களாயிருப்போமாக. எங்கள் தவறுகளை நாங்கள் அறிக்கையிட்டு, பரிசுகள் அளிக்கப்படும்போது, நாங்களும் அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய தானியேலுடனும் மற்றவர்களுடனும் அவருடைய நீதியையுடையவர்களாய் நிற்போமாக. அதுவரைக்கும் கர்த்தாவே, உமது கரத்தில் எங்களை கருவிகளாக உபயோகித்தருளும். இன்று காலையில் உமது வார்த்தையைக் கேட்க எங்கள் செவிகளை கருவிகளாக உபயோகியும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். எங்கள் புரிந்துகொள்ளும் தன்மை தேவனுடைய சித்தத்தை விளங்கிக்கொள்வதாக. ஆமென். 14 தொடங்குவது மிகவும் கடினமாயுள்ளது. அநேக காரியங்களை எடுத்துக்கூற வேண்டியதாயுள்ள தென்றும், ஆனால் அதை எடுத்துக் கூறுவதற்கு நேரம் மிகக் குறைவாக உள்ளது போலவும் தோன்றுகிறது. நான் செல்வதற்கு முன்பு, இந்த இலையுதிர் காலத்தில் அல்லது குளிர்காலத்தில் வேதாகமத்திலுள்ள புஸ்தகங்களில் ஒன்றை சிந்திக்க நமக்குத் தருணம் கிடைக்கக் கூடுமென்று நேற்றிரவு கூறினேன். கர்த்தருக்கு சித்தமானால் கிறிஸ்துமஸுக்குப் பிறகு வெளிநாடு செல்ல விரும்புகிறேன். 15 இன்று காலை வேதவாசிப்புக்கென்று நீங்கள் எபிரெயர் 11ம் அதிகாரத்துக்கு வேதாகமத்தை திருப்ப வேண்டுமென்று விரும்புகிறேன். இதை வாசிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள். நான் 3ம் வசனத்தை வலியுறுத்த விரும்புகிறேன்: விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (எபி 11:1-3.) நான் உபேயாகிக்க நினைத்துள்ள பொருளுக்கு பின்னணியாக இந்த வேதவசனங்கள் சற்று வினோதமாகவே உள்ளன. இன்று காலை இறங்கு வரிசையில் எண்ணுதல் என்னும் பொருளை உபயோகிக்க நினைக்கிறேன், ஏனெனில் அதை தீர்க்கதரிசன முறையில் இணையாகக் கொண்டு செல்ல விரும்புகிறேன். நேற்றிரவு வேதவசனங்களின் பேரில் போதித்தேன். இன்று காலை ஒரு தீர்க்கதரிசன செய்தி; இன்றிரவு சுவிசேஷ செய்தி. 16 இப்பொழுது, காணப்படுகிறவைகள் தோன்றப்படாதவைகளிலிருந்து உண்டாக்கப்பட்டன. இயற்கையாக உள்ள அனைத்துமே ஆவிக்குரிய காரியங்களுக்கு அடையாளங்களாக விளங்குகின்றன என்பதை இத்தனை ஆண்டுகளாக நான் கற்று வந்திருக்கிறேன். நீங்கள் இயற்கையில் ஒன்றைக் காணும்போது அது ஆவிக்குரிய காரியத்துக்கு அடையாளமாயுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? எல்லாமே தோன்றப்படாதவைகளிலிருந்து உண்டாக்கப்பட்டன. பாருங்கள், அப்படியானால் இயற்கையில் காணப்படுபவை ஆவிக்குரியவைகளை பிரதிபலிக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு நான் படித்துக் கொண்டிருந்தேன், இதைக் குறித்து சிறிதளவு நேற்றிரவு கூறினேன் என்று நினைக்கிறேன், நான் படித்துக் கொண்டிருந்தேன்...... இல்லை, கனடாவிலிருந்து வந்து ஒலிபரப்பை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் “மனிதன் உருவாகி 1கோடியே 40 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன” என்று அறிக்கை விடுத்தார். அவர்கள் 1800 ஆண்டில் 1800, 1900ம் ஆண்டுகளுக்கிடையில் எப்பொழுதோ ஒரு எலும்பைத் தோண்டி எடுத்தனர். அது மனித எலும்பாகக் கருதப்பட்டது. அது ஒருக்கால்... அதற்கு எத்தனை வயது என்று கூற அவர்கள் ஆராய்ச்சி செய்தனர். வயோதிபரான இந்த டாக்டர் தன் வாழ்நாள் முழுவதையும் இந்த எலும்பை ஆராய்வதிலே செலவழித்தார். அவர், “இது மனித எலும்பு. இது 1கோடியே 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது'' என்கிறார். 17 இப்பொழுது, அது எவ்வளவு மூடத்தனமானது! ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தை உண்மையல்ல என்று நிரூபிப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் வீணாக்கி விட்டார். இதன் மூலம் அவர் எந்த சரியான முடிவுக்கும் வரவில்லை. நீங்கள் ஒரு எலும்பை பூமியில் புதைத்தால், இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த எலும்பு மாறி விடுகிறது என்று எவருமே அறிவர். நூறு ஆண்டுகளுக்குள் அது போய் விட்டிருக்கும். அதை நீங்கள் எந்த நிலையில் புதைத்திருந்தாலும், ஒரு சில துண்டுகள் மாத்திரமே மீதியாயிருக்கும். பாருங்கள்? ஆயிரம் ஆண்டுகளுக்குள் அந்த எலும்பு எப்படியிருக்கும், பத்து மடங்கு நூறு ஆண்டுகளில்? அதற்கும் பத்து மடங்கு என்ன, பத்து லட்சம் (ஆயிரம் மடங்கு - தமிழாக்கியோன்). அதற்கும் பதினான்கு மடங்கு. ஓ, என்னே! அது வெறும். அதைக் குறித்து நினைப்பதும் கூட புத்திசாலித்தனம் அல்ல. எந்த நிலையிலும் ஒரு எலும்பு 1 கோடியே 40லட்சம் ஆண்டுகள் நீடிக்காது. அது எவருக்குமே தெரியும். அவர் எலும்பைப் போல் காணப்படுகிற ஒன்றை பொறுக்கியிருப்பார். அது 1 கோடியே 40 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று அவர்களால் எப்படி கூற முடிகிறது? பாருங்கள்? தேவன் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை பூமியின் மேல் உண்டாக்கினார், அத்துடன் அது முடிவு பெறுகிறது. 18 சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் என் கூட்டங்களில் ஒன்றில் என்னுடன் தர்க்கம் செய்தார். நான் மனிதன் உருவாகுதலைக் குறித்துப் பேசி, அவன் உண்டாக்கப்பட்டு ஆறாயிரம் ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளன என்றேன். இந்த மனிதன், ''நல்லது , சகோ. பிரன்ஹாமே, உலகம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்று எங்களால் நிரூபிக்க முடியும். எனவே நீங்கள் கூறினது தவறு“ என்றார். நான், “நீங்கள் வேதத்தை விசுவாசிப்பதில்லையா?' என்று கேட்டேன். அவர், ''மனிதர் வேதாகமத்தை எழுதினர் என்று நான் விசுவாசிக்கிறேன்“ என்றார். நான், “மனிதனின் கரம் எழுத்துக்களை எழுதினது என்பது உண்மை தான். ஆனால் அந்த கரத்துக்குப் பின்னால் பரிசுத்த ஆவியானவர் இருந்து கொண்டு அந்த எழுத்துக்களை எழுதும்படி செய்தார். வேதம் அப்படித்தான் உரைக்கிறது” என்றேன். அவர், “உலகத்தைக் குறித்த விஷயத்தில் அவர்கள் எழுதினது தவறு என்பதை நீர் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார். நான், “வேதம் ஒருபோதும் தவறல்ல, ஒருபோதும் தவறல்ல” என்றேன். அவர்,“ நல்லது, மலைகள் எரிமலைக் குழம்பிலிருந்து மேலே தள்ளி வந்துள்ளதை நீங்கள் காணலாம்'' என்றார். நான், “ஆனால் நீங்கள் சும்மா...'என்றேன். அவர், “தேவன் ஆறு நாட்களில் உலகத்தை உண்டாக்கினாரா என்ன?'' என்று கேட்டார். நான் “வேதம் அவ்விதம் கூறவில்லையே. பாருங்கள் அது அவ்விதம் கூறுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டீர்கள்” என்றேன். நான், “ உங்கள் தர்க்கத்தை தீர்த்துவைக்க நாம் வேதாகமத்துக்குச் செல்வோம். ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்' என்று கூறப்பட்டுள்ளது. அது ஒரு காலம்! (Period) அவர் எவ்வளவு காலமாக அதை சிருஷ்டித்துக் கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் நமக்குக் கூறவில்லை. ஆனால் 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஒரு காலம்! அதன் பிறகு, 'பூமியானது ஒழுங்கின்மையாய் இருந்தது! அது தேவன் அதை உபேயாகிக்கத் தொடங்கின போது” என்றேன். பாருங்கள்? அவர்கள் ஒன்றுமில்லாத காரியத்துக்கு மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். பாருங்கள்? பாருங்கள்? 19 தேவன் உலகத்தை உண்டாக்கினார். அதை உண்டாக்க அவருக்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் பிடித்திருக்கும். அது எவ்வளவு காலமென்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அதை உண்டாக்கினார். அதை உண்டாக்க அவருக்கு எவ்வளவு காலம் பிடித்ததென்று அவர் கூறவில்லை. அது எவ்வளவு காலம் என்று அறிந்துகொள்வது நம்முடைய வேலை யல்ல. அவர், “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்'' என்று மட்டுமே கூறினார். காலம்! அத்துடன் அது முடிவு பெறுகிறது. அவ்வளவுதான் அது. எவ்வளவு காலமாக அவர் அதை உண்டாக்கிக் கொண்டிருந்தார் என்பது... ஆனால் அவர் மற்ற காலத்தில் தொடங்கினபோது, சிருஷ்டி வளர ஆரம்பித்தது. பூமியிலுள்ள ஒவ்வொன்றும் பரலோகத்தைப் பிரதிபலிக்கின்றது என்பது என் கருத்து. அதை நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொன்றும் ஜீவனுக்காக போராடுவதை நீங்கள் காணும்போது அது வேறொரு ஜீவனைப் பிரதிபலிக்கிறது என்பதனால் தான். தேவன் மனிதனை உண்டாக்கினபோது, அவர் முதலில் மிருக ஜீவன் போன்ற சிறிய காரியங்களைப் பிரதிபலிக்க தொடங்கினார். அடுத்தபடியாக அவர் வித்தியாசமான வேறொன்றை சிருஷ்டித்தார். அவர் அவ்விதம் செய்ததாக வேதம் உரைக்கிறது. அவர் முதலில் மரங்களையும் தாவர ஜீவன்களையும் உண்டாக்கினார். அதன் பிறகு மனிதனை உண்டாக்கினார். பூமியில் கடைசியாக சிருஷ்டிக்கப்பட்டது மனிதனே, அதன் பிறகு அதற்கு உயர்வான எதுவும் சிருஷ்டிக்கப்படவில்லை. ஏன்? அது பரலோகத்திலுள்ள மிக உயர்வானதை பரிபூரணமாக பிரதிபலித்தது. பரலோகத்திலுள்ள மிக உயர்வானவர் தேவனே, அவர் ஒரு மனிதன். பாருங்கள்? தேவன் ஒரு மனிதன், எனவே இது அதை நிரூபிக்கிறது. தேவன் நமது மத்தியில் வாசம்பண்ண இறங்கி வந்தபோது, அவர் மனிதனாக வந்தார். பாருங்கள்? ஒரு மனிதன், எனவே படிப்படியான வளர்ச்சியின் (evolution) பரிபூரணமே மனிதனாகிய தேவன் என்பதை இது காண்பிக்கிறது. 20 நீங்கள் ஒரு மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் (புல் செடி போன்றவைகளை) ஒரு மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது பரலோகத்திலுள்ள ஜீவ விருட்சத்தைப் பிரதிபலிக்கிறது. இவையனைத்துமே பரிபூரணமடைய தவித்துக் கொண்டிருக்கின்றன. இங்கு எபிரெயர் நிரூபம் கூறுவது போல், இயற்கையில் காணப்படும் எதுவும் தோன்றப்படாதவைகளால் உண்டாக்கப்பட்டன. வேறுவிதமாகக் கூறினால், அவை இயற்கைக்கு மேம்பட்டவை. இயற்கையிலுள்ளவை இயற்கைக்கு மேம்பட்டவைகளை பிரதிபலிக்கின்றன. பாருங்கள். இயற்கையிலுள்ளவை இயற்கைக்கு மேம்பட்டவைகளுடன் நித்தியமானவைகளாய் இருந்திருக்கவேண்டும். ஆனால் பாவம் இயற்கையிலுள்ளவைகளை தாறு மாறாக்கிவிட்டது. எனவே, இது இப்படியிருக்குமானால் இது இப்படித்தான் என்று நான் விசுவாசிக்கிறேன் பூமியில் நடக்கும் ஒவ்வொன்றும், நடந்து கொண்டிருக்கும் ஆவிக்குரிய காரியங்களுக்கு அடையாளமாயுள்ளது. பாருங்கள்? அது ஏதாவதொன்றை பிரதிபலிக்க வேண்டும் மனிதன் புரிந்துள்ள சாதனைகள். 21 இப்பொழுது, நாம் காண்கிறோம், உதாரணமாக நமது இயற்கை சரீரம். இங்கு ஒரு இயற்கை சரீரம் உள்ளது, இந்த சரீரம் தன்னை மறுபடியும் உற்பத்தி செய்து கொண்டு குழந்தைகளைத் தோன்றச் செய்ய உண்டாக்கப்பட்டுள்ளது. இயற்கை சரீரத்தில் குழந்தை பிறக்கும்போது, முதலில் வெளிவருவது தண்ணீர் என்று நாம் காண்கிறோம். பின்பு இரத்தம், பின்பு ஜீவன். கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்திலும் முதலில் வெளிவருவது தண்ணீர் பின்பு இரத்தம், ஜீவன் என்று நாம் காண்கிறோம் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இயற்கையான காரியங்கள் ஆவிக்குரிய காரியங்களை எவ்விதம் பிரதிபலிக்கின்றன என்பதைக் கண்டீர்களா இயற்கை பிறப்பு. உதாரணமாக விவாகத்தின் மூலம் ஏற்படும் இணைப்பை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் இந்த விவாகத்தில் காண்பது என்னவெனில், முதலில் ஒருவர் மற்றவரை சந்தித்து மணம் கோருதல் (Courtship) ஒப்பந்தங்கள், அதன் பிறகு விவாகம், விவாகமானவுடனே அவள் காலம் முழுவதும் அவனுக்கு மனைவியாயிருக்கிறாள். கிறிஸ்துவும் சபையும் குறித்த விஷயத்திலும் அதே காரியம்தான். பாருங்கள்? முதலில் மணம் கோருதல். தேவன் நமது இருதயங்களுக்கு அழைப்பு விடுக்கிறார், நாம் கீழ்ப்படிந்து நம்மை ஒப்புவிக்கிறோம், பிறகு விவாகவைபவம். மணவாட்டி மணவாளனின் பெயரைத் தரித்துக்கொள்கிறாள். பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அதுதான் அவளை மணவாட்டியாக்குகிறது. மணவாட்டி எப்பொழுதுமே மணவாளனின் பெயரைத் தரித்துக்கொள்கிறாள். 22 இப்படி அநேக காரியங்களைக் குறித்து இங்கு பேசலாம். நான் ஒரு பட்டியலை எழுதி வைத்திருக்கிறேன். அதிலுள்ளவைகளையும் அதற்கு ஆதாரமாயுள்ள வேத வசனங்களையும் எடுத்துக் கூறினால், எனக்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். உதாரணமாக “தண்ணீர், இரத்தம், ஆவி” என்பதற்கு ஆதாரமாயுள்ள 1 யோவான் 5:7.அது இயற்கை பிறப்பையும் ஆவிக்குரிய பிறப்பையும் காண்பிக்கிறது. பரலோகத்திலே மூவர் ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.'' இம்மூவரும் ஒன்றாயிருக்கின்றனர் (are one) பூமியிலே மூன்று ஒருமைப்பட்டிருக்கின்றன (agree in one). இவை ஒன்றல்ல, ஆனால் ஒருமைப்பட்டிருக்கின்றன; ''தண்ணீ ர், இரத்தம், ஆவி .“பாருங்கள் ”தண்ணீர், இரத்தம், ஆவி.“ என்பதற்கு இயற்கை பிறப்பு அடையாளமாயுள்ளது. 23 எனவே ஒரு மனிதன் ''நீதிமானாக்கப்படுதல் மட்டுமே இருந்தால் போதும்' என்னும் கருத்தை கொண்டிருந்தால், அது தவறு. அவன் நிச்சயம் தவறாயிருக்கவேண்டும். சபையானது, அநேக பெந்தெகொஸ்தெயினர் விசுவாசிப்பது போல், “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டால், அவ்வளவு தான், மனந்திரும்பி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினால், அதுவும் தவறு. ஏனெனில் பரிசுத்த ஆவி உள்ளே வருவதற்கு முன்பு, நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதலைப் பெற்று சுத்திகரிக்கப்பட வேண்டும். அப்படி செய்யாமல் போனால், நீங்கள் இரத்தத்தை விட்டு விடுகிறீர்கள். பாருங்கள்? பரிசுத்த ஆவியின் அபிஷேகமே மறுபிறப்பு என்பது போல் ஜனங்கள் பேசிக்கொள்கின்றனர். அது சரியல்ல. பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் மறுபிறப்பும் வித்தியாசமானவை. மறுபிறப்பு என்பது நீங்கள் மறுபடியும் பிறத்தல். ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது ஊழியத்துக்கென அந்த பிறப்புக்குள் வல்லமை வரும்போது அது உண்மை. பாருங்கள்? பரிசுத்த ஆவி என்பது... பரிசுத்த ஆவிக்குள் அபிஷேகம் பண்ணப்படுதல். யோவான் - 5.24 24 மறுபிறப்பு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நீங்கள் மறுபிறப்பை அடைகிறீர்கள். பாருங்கள்? நீங்கள் விசுவாசித்து அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுதல் என்பது பிறப்பு, பாருங்கள், ஏனெனில் நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டீர்கள். அதற்கு ஆதாரமான வேதவசனம் உங்களுக்குத் தேவையானால் யோவான் 5:24ஐ எடுங்கள்: “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.'' பாருங்கள், அவன் விசுவாசிப்பதனால் அவனுக்கு ஜீவன் உண்டு. அதே கூட்டம் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற பெந்தெகொஸ்தேக்கு செல்ல வேண்டியதாயிற்று. நிச்சயமாக. பரிசுத்தஆவி ஊழியத்திற்கென பெற்றுக்கொள்ளும் வல்லமை. எனவே மறுபிறப்பைக் குறித்து பேசி அதை பரிசுத்த ஆவி பெறுதலுடன் இணைக்கும்போது, மெதோடிஸ்டுகளில் அநேகரும் மற்றவரும் அங்கு தவறு செய்கின்றனர். அது அப்படியிருக்க முடியாது. அது இங்குள்ள வேத வசனத்துடன் ஒத்துப்போகாது. அதை நீங்கள் பக்கவாட்டில் பெறுவீர்கள். வேதவசனம் அதை எங்கு பொருத்தியுள்ளதோ அவ்விதமாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும். பாருங்கள்? பரிசுத்தஆவி என்பது... “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் மறுபிறப்பு அடைவீர்கள்” என்றா உள்ளது? இல்லை. “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது ” (அப். 1:8) “நீங்கள் பெலனடைவீர்கள்.” பாருங்கள்? அவர்கள் ஏற்கனவே நித்திய ஜீவனுக்கென்று விசுவாசித்தனர், ஆனால் வல்லமையைப் பெற அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதா யிருந்தது. “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். ஏனெனில் பரிசுத்த ஆவி உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாயிருந்து, நீங்கள் கிறிஸ்துவில் வளர்ந்த ஒருவர் (adult) என்பதைக் காண்பிக்கிறது. 25 இப்பொழுது இயற்கையில் நடப்பவை. ஆவிக்குரிய காரியங்கள் அனைத்துக்கும் நடப்பவைகளுக்கும் மற்றவைகளுக்கும் இயற்கைக்கு மேம்பட்டவைகளுக்கும் அடையாளமாக இல்லை. இயற்கையில் நடப்பவை இயற்கைக்கு மேம்பட்டவைகளுக்கு அடையாளமாயுள்ளன. நாங்கள் உலக கண்காட்சி நடந்து கொண்டிருந்த இடத்துக்கு அருகிலுள்ள ஸ்போகேன் என்னுமிடத்துக்கு சென்றிருந்தோம். என் குடும்பத்தினரை அந்தக் கண்காட்சிக்கு கொண்டு செல்லலாம் என்று எண்ணினேன். இதற்கு முன்பு நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடந்த ஒரே ஒரு உலக கண்காட்சிக்கு மாத்திரமே சென்றிருக்கிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன்பு சிக்காகோவில் நடந்தது. நானும் ஹோப்பும் அங்கு சென்றிருந்தோம். நாங்கள் அதிக நாட்கள் அங்கு தங்கவில்லை. ஒரு நாள் மாத்திரமே தங்கினோம். ஏனெனில் அங்கு ஜேப்படி திருடர்கள் ஏராளம் இருந்தனர். என் ஒன்றுவிட்டு சகோதரன் ஹோப்புக்குக் கொடுத்த பின் ஒன்றை அவள் அணிந்திருந்தாள். நான் அவள் பக்கத்தில் தான் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் யாரோ ஒருவன் அதை திருடிக் கொண்டு போய் விட்டான்... அது துணிச்சலான செயல். எனவே நான்... நாங்கள் ஒருநாள் தங்கி விட்டு திரும்பி வந்து விட்டோம். 26 ஆனால் இந்த உலகக் கண்காட்சிக்கு என் குடும்பத்தினரை அழைத்து சென்றிருந்தேன். இங்குள்ள லூயிவில் கண்காட்சி போன்று தான் அது இருந்தது. அவர்கள் அதிகமாக விளம்பரம் செய்த விண்வெளி ஊசியை (space needle) நீங்கள் கண்டிருப்பீர்கள். அது எல்ஸ்லி ... அல்லது பிரவுன் கட்டிடத்துக்கு சென்று 'எலிவேட்டரில் எட்டு அல்லது பத்து மாடிகள் உயர சென்று கீழே வருவது. அதுதான். ஜெனரல் எலெக்ட்ரிக் நிர்வாகம் இந்த விண்வெளி ஊசியை அந்த உலகக் கண்காட்சியில் வைத்திருந்த தென்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு தலை சிறந்ததாக காணப்பட்ட ஒன்று அங்கிருந்தது. ஜெர்மனி, ருஷ்யா இன்னும் உலகிலுள்ள மற்ற நாடுகளும் இதில் பங்கு கொண்டன, ஏனெனில் இது உலக கண்காட்சி. ஆனால் ஜெர்மனி, பிரான்ஸ் இன்னும் மற்ற நாடுகள் வைத்திருந்த கண்காட்சி பொருட்கள் இந்த பிரசங்க பீடம் உள்ள இடம் போன்று அவ்வளவு சிறிய அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. 27 ஆனால் விஞ்ஞானிகள் தங்கள் சாதனைகளைப் புரிந்து காண்பித்துக் கொண்டிருந்தனர், அவர்கள் காண்பித்த முக்கியமான ஒன்று புகையிலை உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள். புகைபிடிப்பவன் எவனும் அதைக் கண்டுவிட்டு வெளியே வந்து மறுபடியும் புகை பிடித்தால் அவனுக்கு முளையில் ஏதோ கோளாறு உண்டு. அவர்கள் ஒரு சிகரெட்டை எடுத்து அதை ஒரு இயந்திரத்தில் பொருத்தி அந்த புகையிலையிலிருந்து வெளியேறும் புகையை இரசாயனம் நிறைந்த குழாயின் வழியாக செலுத்தின போது, அது வெள்ளை புற்றுநோயால் நிறைந்ததை நான் கண்கூடாகக் கண்டேன் ஒரே ஒரு சிகரெட். அதைக் காண்பித்த விஞ்ஞானி, “உலகெங்கிலுமுள்ள ஜனங்கள், 'நான் புகையை உள்ளே இழுப்பதில்லை (inhale) என்கின்றனர்” என்று கூறிவிட்டு, அவர் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து, புகையை இழுத்து, அதை நுரையீரல்களுக்குள் இழுத்துக்கொள்ளாமல் அல்லது மூக்கு துவாரங்களின் வழியாக புகையை விடாமல், அதை வாயிலேயே வைத்து, அதை இரசாயனங்களின் வழியாக அந்த புகையை செலுத்தின்போது அதில் புற்றுநோய் எதுவும் இல்லை. அவர், “அப்படியானால் அது எங்கு சென்றது? என் வாய்க்குள். அந்த புகையை நான் விழுங்கும் போது அது வயிற்றினுள் செல்கிறது'' என்றார். அவர், ”இப்பொழுது...'' 28 அதன் பிறகு ஒரு கேள்வி எழுந்தது: ''சிகரெட்டுகள் கெடுதி செய்வதில்லை என்று மருத்துவர்கள் கூறக் காரணம் என்ன? அவர், ''தன் பிறப்புரிமையை விற்றுப்போடும் எந்த மனிதனும்! அத்தகைய அறிக்கைவிடும் எந்த மருத்துவரும் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம், ஏனெனில் சிகரெட் கம்பெனிகள் அவருக்கு நிறைய பணம் கொடுக்கும்'' என்றார். அவர் உண்மையில் தன் பிறப்புரிமையை விற்றுப்போடுகிறார். அப்படிச் செய்வதில்லையென்று அவர் ஆணையிட்டிருக்கிறார். இருப்பினும் அவர்கள் செய்கின்றனர். அவர், ''இதோ இந்த இயந்திரம் நாங்கள் விஞ்ஞானத்தின் மூலம் சாதனை புரிந்து நிரூபிப்போம்“ என்றார். அங்கு சினிமா நட்சத்திரம் யூல் பிரன்னர் இருந்தார், அவரை உங்களுக்குத் தெரியும். அந்த சிறு அளவு நிக்கோட்டின் உண்டானவுடனே, அவர், ”வடிகட்டும் பொருள் முனையில் கொண்ட (filter tips) சிகரெட்டுகள்'' என்கிறீர்கள். அது ஒரு மனிதனுடைய மனநிலையைக் காண்பிக்கிறது. புகை எதுவும் இல்லையென்றால், உங்களுக்கு தார் (tar) கிடைக்காது. தார் தான் புகையை உண்டாக்குகிறது. நீங்கள் வடிகட்டும் பொருள் முனையில் கொண்ட சிகரெட்டைப் புகைத்தால், சாதாரண சிகரெட் ஒன்று புகைப்பதற்கு பதிலாக மூன்று அல்லது நான்கு வடிகட்டும் பொருள் முனையில் கொண்ட சிகரெட்டுகளைப் புகைக்க வேண்டும் அப்பொழுது தான் நீங்கள் திருப்தி பெற உங்களுக்குப் போதிய தார் கிடைக்கும்“ என்றார். உங்களுக்கு புகை கிடைக்காவிட்டால் தான் கிடைக்காது. புகையைப் பெற தார் இருக்க வேண்டும் எனவே அவர், ”நீங்கள் புகை பிடிப்பதாயிருந்தால், வடிகட்டும் பொருள் இல்லாத ஒரு சிகரெட்டைப் புகையுங்கள். இந்த ஒரு சிகரெட் உங்களுக்கு திருப்தியை அளிக்கும், ஆனால் மற்றதை நீங்கள் மூன்று சிகரெட்டுகள் புகைத்தால் தான் திருப்தி உண்டாகும். ஏனெனில் அதில் தார் மிகக் கொஞ்சமாக கிடைக்கிறது“ என்றார். அது விற்பனை உபாயம். நாடு முழுவதுமே இத்தகைய விற்பனை உபாயத்தாலும், அசுத்தத்தாலும் இன்னும் மற்றவைகளாலும் நிறைந்துள்ளது. 29 அவர் அதை எடுத்து, அந்த சிறு அளவு நிக்கோட்டின் எவ்விதம் தொண்டையிலும் நுரையீரலிலும் சிக்கிக்கொள்கிறது என்பதைக் காண்பித்தார். அது முதலில் வெள்ளை நிறமாயிருந்து, பிறகு இளஞ்சிவப்பாக (pink) மாறி, இளஞ்சிவப்பிலிருந்து இந்திர நீலமாக (purple) மாறுகின்றது. அந்த சிறு உயிரணுவின் (cell) துணுக்குகள் (particles) பூதக்கண்ணாடியின் வழியாய் இவ்வளவு பெரிதாய் காணப்படுகின்றன. ஆனால் இதைக்காட்டிலும் சக்தி வாய்ந்த பூதக் கண்ணாடியின் வழியாய் உயிரணு முழுவதையுமே காணலாம். அதன் பிறகு அவர், ''அது இந்திர நீலமாக மாறும் போது, புற்றுநோய் உள்ளதென்று அர்த்தம். ஒரு நாளில் ஒரு பாக்கெட் சிகரெட் புகைக்கும் ஒருவனுக்கு புற்றுநோய் வருவதற்கு புகை பிடிக்காதவனைக் காட்டிலும் எழுபது சதவிகிதம் அதிக வாய்ப்புண்டு“ என்றார். அத்தகைய அபாயகரமான செயலில் ஈடுபடுவதென்பது முட்டாள் தனம். 30 அவர் வேறொன்றை எடுத்து அதை நிரூபித்தார். அவர் ஒரு வெள்ளை எலியை வெளியே கொண்டு வந்தார். அவர் ஒரு சிகரெட்டை எடுத்து அதை இயந்திரத்தில் பொருத்தி அதன் புகையை ஒரு வகையான வெள்ளைச் சலவைக் கல்லின் மேல் செலுத்தி, ஒரு பஞ்சுத் துண்டினால் அதன் மேல் படிந்திருந்த நிக்கோட்டினைத் துடைத்து, அதை எலியின் முதுகில் தடவினார் ஒரே ஒரு சிகரெட். ஏழு நாட்களுக்கு ஒரு முறை அவர்கள் எலிகளை வெளியே கொண்டு வந்து அந்த நாளுக்கான பாடத்தைக் கற்றுக்கொடுத்தனர். நிக்கோட்டின் தடவப்பட்ட எலியை அவர்கள் கூண்டில் அடைத்து ஏழு நாட்களுக்குப் பிறகு வெளியே கொண்டு வந்தபோது, புற்றுநோய் இவ்வளவு உயரமாக எலியின் முதுகில் காணப்பட்டது. சில எலிகள் இந்த ஏழு நாட்கள் கூட உயிர் வாழ்வதில்லை. இந்த எலியால் அசையவும் கூட முடியவில்லை. புற்றுநோய் அதன் கால்களில் படர்ந்து, அதன் முதுகில் சுமார் அரை அங்குலம் உயரத்துக்கு புற்றுநோய் எழும்பியிருந்த அந்த அருவருப்பான காட்சியைப் பார்த்த பிறகு என்னால் இரண்டு மூன்று நாட்கள் உண்ண முடியவில்லை இதெல்லாம் ஒரு சிகரெட்டிலிருந்து வந்த நிக்கோட்டினால் விளைந்தது. இது அவர்கள் சிகரெட் புகைப்பதை நிறுத்தும்படி செய்கிறதா என்ன? பெரிய உருவம் கொண்ட ஒருவர் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் வியர்வை வடிந்தது. அவர், “இது மனதில் பதியத்தக்கதாயுள்ளது, அல்லவா?'' என்றார். நான், “நீங்கள் புகை பிடிப்பதுண்டா?” என்று கேட்டேன். அவர், “ஆம் ஐயா'' என்றார். ''அப்படியானால், நீங்கள் அதை நிறுத்தவேண்டும்'' என்றேன். அதுதான், சாதனைகள், அது புற்றுநோயை உண்டாக்குகிறது என்று அவர்களால் நிரூபிக்க முடிகிறது. 31 இந்த உலகம் நிலை நின்று நாகரீகமும் நிலைத்திருக்குமானால், மது விலக்கு முன்பு இருந்த காலத்தில் ஒரு மது குப்பியை விற்றால், அதற்கு எவ்விதம் அபராதம் விதிக்கப்பட்டதோ, அதே விதமாக இன்னும் சில ஆண்டுகளில் ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை யாராகிலும் விற்றால், அதைவிட பத்து மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று நான் முன்னுரைத்தேன். அது விஸ்கியை விட பத்து மடங்கு மோசமானது, நிச்சயமாக. அது உயிரைக் குடிக்கும் ஒன்று. நீங்கள் எவ்வளவு தான் அதைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தாலும், அவர்கள் அதில் சிறிதும் கவனம் செலுத்த மறுக்கின்றனர். “அவர் ஒரு உருளும் பரிசுத்தர் பிரசங்கி” என்று சொல்லிவிட்டு அதை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். பாருங்கள், அதுதான், அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. 32 ஆனால் நான் குறிப்பிடுவது என்னவெனில் விஞ்ஞானம் சாதிக்க முடிந்தவையே. அவர்கள் உலகக் கண்காட்சியில், விஞ்ஞானம் இயற்கையில் தன் ஆராய்ச்சியின் மூலம் என்ன சாதித்துள்ளது என்பதைக் காண்பித்தனர். இப்பொழுது நாம் தேவன் ஆவிக்குரிய ஆராய்ச்சியின் மூலம் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் ஜனங்களுக்கு என்ன சாதனை புரிந்துள்ளார் என்பதை இங்கு காண்பித்துக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானப் பிரகாரம் சாதனை புரிய நீங்கள் விஞ்ஞான ரீதியில் பணிபுரிய வேண்டும். அது போன்று ஆவிக்குரிய பிரகாரம் சாதனை புரிய நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் பணிபுரிய வேண்டும். அந்த எலி காண்பதற்கு மிகவும் பயங்கரமாய் இருந்ததா என்று நீங்கள் எண்ணக்கூடும். அது அப்படித்தான் இருந்தது. அதை நீங்கள் கண்டிருக்க வேண்டும்! உங்களுக்குக் காண்பிக்க அதன் புகைப்படம் என்னிடம் இருந்தால் நலமாயிருக்கும்! அதை புகைப்படம் எடுக்க முடிந்திருந்தால் நான் எடுத்திருப்பேன், அவர்களோ அனுமதிக்கவில்லை. ஆனால் கவனியுங்கள், அந்த எலி அதன் பிறகு சில மணி நேரம் மாத்திரமே உயிர் வாழ்ந்தது. சில எலிகள் அந்த ஏழு நாட்கள் கூட உயிர் வாழ்வதில்லை. அதை யோசித்துப் பாருங்கள். 33 அது புற்றுநோயால் அரிக்கப்பட்டதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். அப்படியானால் சுவிசேஷத்தைப் புறக்கணித்த ஒருவனின் ஆத்துமா எந்நிலையில் உள்ளது என்பதை நீங்கள் காண வேண்டும். இவர்கள் எவ்வளவு விகாரமாக காட்சியளிக்கின்றனர் என்பதை நீங்கள் காணவேண்டும். சாத்தான் தேவனுடைய குமாரன் ஒருவனை எடுத்து அவனைத் தேவனுடைய பார்வையில் எவ்வளவு விகாரமுள்ளவனாக்கி விடுகிறான்! ஓ, அவன் ஆறடி உயரமும், பரந்த தோள்களை உடையவனும், சுருட்டை தலைமுடி உள்ளவனாகவும் இருக்கலாம். ஆனால் அதனால் உபயோகமில்லை. ஒரு மனிதனுக்கு உள்ளே இருப்பதுதான் நிலைத்திருக்கக் கூடியது. வெளிப்புறம் எப்படியானாலும் வெறும் மண்ணே . எனவே அது சாதனை, அவர்கள் விண்வெளி ஊசி போன்றவைகளைக் காண்பித்து அவர்களால் என்ன சாதிக்க முடிந்தது என்பதை எடுத்துக் கூறி, அணுசக்தி போன்றவைகளை விளக்கிக் காண்பித்தனர். அடுத்த நூற்றாண்டில், இருபதாம் நூற்றாண்டு ஷெவர்லே கார் எப்படியிருக்கும் என்று அவர்கள் காண்பித்தனர். ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் அதை கண் காட்சியில் வைத்திருந்தது. அது எனக்கு ஒரு மூடியுள்ள வாயு குழாவைப் போல் தோற்றமளித்தது. அது அணுசக்தியினால் எவ்விதம் இயங்குமென்று அவர்கள் காண்பித்தனர். ஏதோ சிறகு போல் ஒன்றிருந்தது. அது ஒன்றின் மேல் ஒன்று உயர்த்தப்பட்டு அதைக் கட்டுப்படுத்தினது. அது ஒரு பெரிய நன்மையாயிருக்கும். 34 நாம் தேவனுடைய புத்தகத்தின் பக்கங்களை இன்று காலையில் புரட்டி அந்த நேரத்தில் சபை எப்படி இருக்குமென்றும், தேவன் புரிந்துள்ள சாதனைகளை காண முடியுமா என்றும் பார்க்கலாம். ஓ, பூமியில் நடைபெறும் சம்பவங்கள் வேறெங்கோயிருந்து வரும் ஒன்றுக்கு எப்பொழுதும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. ஆனால் அவை பூமியை அடையும் போது அது வழக்கமாக தாறுமாறாக்கப்பட்ட நிலையில் இருக்கும். ஏனெனில் அது அந்தகாரமும் பாவமும் நிறைந்த உலகில் நிகழ்கின்றது. பாருங்கள்? ஆனால் ஆவிக்குரிய ஆதிக்கமாகிய மற்றொரு பரிமாணங்களில் அதன் உண்மையான தோற்றம் உள்ளது. மூன்று பரிமாணங்களில் நடப்பவை ஆறாம் பரிமாணத்தில் நடப்பவைகளுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளன. அதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 35 கடந்த சில ஆண்டுகளாக நாம் புரிந்துள்ள சாதனைகளை எண்ணிப் பார்ப்போம். ஏற்கனவே நடந்த ஒன்றிலிருந்து நாம் தொடங்குவோம். கர்த்தருக்கு சித்தமானால், உங்களை நான் நீண்டநேரம் வைத்திருக்கப் போவதில்லை. இதை நீங்கள் வேகமாக காணவேண்டுமென்று விரும்புகிறேன். ஓ, எனக்கு இது சிந்தையில் தோன்றின போது இங்கிருந்து பறந்து சென்றுவிட வேண்டுமென்னும் உணர்ச்சி எனக்குண்டானது. இப்பொழுது கவனியுங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு, போக்குவரத்து குதிரை இழுத்துச் சென்ற வண்டியின் மூலமாகவே. அது நீண்ட காலம் முன்பு அல்ல. நான் குதிரை வண்டியில் சேணம் பூட்டப்பட்ட குதிரையின் மேல் சென்றிருக்கிறேன். நான் பதினைந்து பதினாறு வயது இளைஞனாயிருந்த போது, குதிரையின் மேல் சவாரி செய்திருக்கிறேன். குதிரை வண்டியில் பட்டினத்துக்கு சென்றிருக்கிறேன். அப்பொழுது இங்குள்ள இந்த சபையைக் கடந்து சென்றிருக்கிறேன். அப்பொழுது ஒரு மண் வீதி அங்கிருந்தது, இந்த பக்கம் சகதி நிலம் இருந்தது. அதில் கட்டிடம் வரை உயரமுள்ள புல் வளர்ந்திருக்கும். நான் பண்ணையில் விளைந்த 'பட்டர் பீன்ஸ்ஸை குதிரை வண்டியில் ஏற்றிச்சென்று அதை கடைகளில் கொடுத்து விட்டு வருவது வழக்கம். இப்பொழுது நான் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் வாகனத்தில் கொண்டு செல்கிறேன். என்ன ஒரு வித்தியாசம் 36 குதிரை வண்டி காலம், அதன் பிறகு மோட்டார் வாகன காலம். பிறகு ஆகாய விமான காலம் வந்தது. அது பூமியிலிருந்து ஆகாயத்தில் பறந்து சென்றது. நீங்கள் கவனிப்பீர்களானால், ஒருவருக்கு ஆவிக்குரிய சிந்தை இருந்து அவர் புரிந்துகொள்வாரானால், விஞ்ஞானம் புரிந்த உறுதியான சாதனைகள் தேவன் தமது சபையில் புரிந்துள்ள சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. இப்பொழுதுள்ள நாட்களில்.... செய்தியாளன் செய்திக்கு முடிவில் வருகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை நாம் சபை காலங்களை குறித்து பார்த்த போது கண்டோம். குதிரை வண்டி காலம் யாரைக் குறிக்கிறது? அது லூத்தரின் காலம் முடிவடைதல். பாருங்கள், குதிரை வண்டிகாலம். அவர்கள் நீதிமானாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவன் சபையை ரோமன் மார்க்கத்திலிருந்து, கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து, 'விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்' என்னும் முதலாம் ஆவிக்குரிய சாதனைக்குள் கொண்டு வந்தார். அது குதிரை வண்டிகாலம், அவர்கள் குதிரைவண்டி காலத்தைக் கடந்து வந்து, அது முடிவு பெற்றது. 37 போக்குவரத்தில் மனிதன் அடுத்தபடியாக புரிந்த சாதனை மோட்டார் வாகனம். நீங்கள் கவனிப்பீர்களானால் மோட்டார் வாகனத்தின் சக்தி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெஸ்லியின் காலம் முடிவு பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் ஆவிக்குரிய சாதனையைக் கொணர்ந்தது. அதாவது சபையானது நீதிமானாக்கப்படுதலின் நிலையிலிருந்து பரிசுத்தமாக்கப்படுதல் நிலைக்கு உயர்த்தப்பட்டது. நாம் தொடர்ந்து செல்லும்போது, இதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். அதாவது 'சபை'' என்றழைக்கப்படுவது சபையல்ல. சபை என்பது ஆவிக்குரிய சபை! சபையைச் சேர்ந்து கொண்ட கோடிக்கணக்கான லூத்தரன்களுக்கு, ஒரு பன்றிக்கு சேணத்தின் அங்கவடியை (Side saddle) குறித்து ஒன்றுமே தெரியாதது போல், நீதிமானாக் கப்படுதலைக் குறித்து ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. அவ்வாறே வெஸ்லியின் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பரிசுத்தமாக்கப்படுதலை ஏற்றுக்கொண்டனர்: ஆனால் ஒரு முயலுக்கு பனிக்கட்டி காலணிகளைக் (snow shoes) குறித்து ஒன்றுமே தெரியாதது போல் இவர்களும் தேவனுடைய பரிசுத்தமாக்கும் வல்லமையைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. பாருங்கள், அவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. 38 ஆனால் அதை கண்டு கொண்ட ஜனங்கள் இருந்தனர். அல்லேலூயா! நான் எதற்கு வருகிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? தேவனுடைய பார்வையில் “நீதிமானாக்கப்பட்டு ”''நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருப்பது “ என்னவென்பதை சிலர் அறிந்திருந்தனர். அந்த லூத்தரன்களில் சிலர் விசுவாசமுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் அதை விசுவாசித்தனர். கத்தோலிக்க சபை என்ன கூறின போதிலும், அக்காலத்து செய்தியாளன் ”விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்“ என்று பிரசங்கித்ததனால், அவர்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து அதில் உறுதியாய் நின்றனர். அவர்கள் நீதிமானாக்கப்பட்ட நிலையில் விசுவாசம் கொண்டிருந்தனர். அவர்கள் தேவனுடைய கிருபையினால் நீதிமானாக்கப்படுதலை அடைந்து, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருந்தனர். 39 நாம் மறுபடியும் என்ன காண்கிறோம் என்றால், மெதோடிஸ்டுகள் பரிசுத்தமாக்கப்படுதலுடன் வந்தனர். உண்மையில் பரிசுத்தமாக்கப்பட அநேக மெதோடிஸ்டுகள் இருந்தனர் ஆனால் அவர்களில் அநேகர் அதைப் பெற்றுக்கொண்டதாக உரிமை கோரி, அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. மெதோடிஸ்டு சபை பரிசுத்தமாக்கப்படுதலைப் போதித்தது. அவர்கள் முழங்கால்படியிட்டு அழுது எழுந்து நின்று, “தேவனுக்கு மகிமை! நான் பரிசுத்த மாக்கப்பட்டேன்” என்று கூறிக்கொண்டு முன்பு வாழ்ந்தது போலவே வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்களில் சில மனிதரும் ஸ்திரீகளும் உலகத்தின் காரியங்களிலிருந்து உண்மையாய் பரிசுத்தமாக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட, தனியே ஒதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தனர். ஏன்? அது மோட்டார் வாகன காலம், அது அதிக குதிரை சக்தியைக் கொண்டிருந்தது. பழைய T மாடல் கார் பதினைந்து அல்லது இருபது குதிரை சக்தியைக் கொண்டிருந்திருக்கக் கூடும். பாருங்கள், ஒரு சிறு என்ஜின் பதினைந்து அல்லது இருபது குதிரைகளை இப்படி தன்னுள் அடக்கிக் கொண்டிருந்தது. பரிசுத்தமாக்கப்படுதல்! விஞ்ஞானம் இயற்கையில் ஒன்றை சாதிக்கும் போது தேவன் ஆவிக்குரிய விதத்தில் ஒன்றை சாதிக்கிறார், பாருங்கள். ஏதோ ஒன்று எல்லா காலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பரிசுத்தமாக்கப்படுதல் காலத்துக்குப் பிறகு...... 40 நாம் பழங்காலத்து பெவரிங்டனை எடுத்துக் கொள்வோம். அவரைக் காட்டிலும் பெரிய மனிதர் யார் இருக்கக்கூடும். ஜான் வெஸ்லி, ஜார்ஜ் விட்ஃபீல்ட், ஃபின்னி, நாக்ஸ், வியர்வை சிந்தி பாடுபட்ட அநேக மெதோடிஸ்டுகளைப் பாருங்கள். அவர்கள் பூமியில் நரக வேதனை அனுபவித்தனர். எனெனில் தேவனுடைய வார்த்தை கிருபையின் இரண்டாம் படியாகிய பரிசுத்தமாக்கப்படுதலைக் குறித்து போதிக்கிறது என்று அவர்கள் விசுவாசித்து, அதில் உறுதியாய் நிலை நின்று, அதைக் கொண்டு அற்புதங்களைச் செய்தனர். ஹென்றி ஃபோர்டும் மற்றவர்களும் போக்குவரத்து விஷயத்தில் குதிரையின் காலத்தைக் கடந்து பழைய மாடல் ஃபோர்ட் காரை தயாரித்த விதமாக, வெஸ்லியும் லூத்தரன் காலத்தைக் கடந்து வந்தார். 41 அதன் பிறகு பெந்தெகொஸ்தேயினர் தோன்றினர் உலக விஞ்ஞானம் ஒரு மோட்டார் வாகனத்தை உற்பத்தி செய்து அதன் பிறகு ரைட் சகோதரர் ஆகாய விமானத்தை தயாரித்தனர் இந்த பறக்கும் இயந்திரம் பூமியில் ஓடும் காரை விட மேலானது எனெனில் அது வானத்தில் உயர பறக்கிறது. ரைட் சகோதரர் விஞ்ஞானத்தின் மூலம் ஒன்றை தயார் செய்து சாதனை புரிந்து, ஒரு பெரிய ஆவிக்குரிய சம்பவம் நிகழவிருக்கிறது என்பதைக் காண்பித்தனர். ரைட் சகோதரர் மனிதனின் பாதங்கள் இப்பூமியிலிருந்து உயர கொண்டு செல்லும் சாதனையை புரிந்த போது, பெந்தெகொஸ்தே ஆவி விழுந்து ஆவிக்குரிய வரங்களுடனும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடனும் வானத்துக்கு கொண்டு சென்றது. மனிதன் வானத்தில் பறந்தான்! ஓ, அல்லேலூயா! அவனுடைய பாதங்கள் தரையை விட்டுச்சென்று, அவன் வானத்தில் நீந்தினான். ஓ, அவன் குதிரை வண்டியை விட எவ்வளவு மேலே சென்று விட்டான்! அவன் மோட்டார் வாகனத்தைவிட எவ்வளவு மேலே சென்று விட்டான்! அவன் வானத்தில் பறந்தான். அவன் தட்டினான், மூச்சுத் திணறினான், குத்தினான், ஆயினும் அவன் பறந்தான். பாருங்கள், மனிதன் பூமியில் சாதிப்பவை, தோன்றப்படாதவைகளால் உண்டாக்கப்பட்டன. பசி தாகம் கொண்டு ஆவியில் நிறைந்து வார்த்தையில் நிலைத்திருக்கும் மக்களின் மூலம் தேவனால் ஏதோ ஒன்றை சாதிக்க முடிந்தது. 42 வெஸ்லி வார்த்தையின் நிமித்தம் வெளியேறி, கெட்ட பெயரைச் சம்பாதித்து, பைத்தியக்காரன் என்று அழைக்கப்படாமல் இருந்தால், அவர் சாதித்திருக்கவே முடியாது. வெஸ்லி தேவனுடைய சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். அவ்வாறே லூத்தரும் தேவனுடைய சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். சபைகள் கூறுவதைக் குறித்து, ஸ்தாபனங்கள் கூறுவதைக் குறித்து லூத்தர் கவலைகொள்ளவேயில்லை, விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் என்பதில் அவர் விசுவாசம் கொண்டிருந்தார். அல்லேலூயா! அவர் வார்த்தை என்னும் தேவனுடைய இரசாயனங்களை எடுத்து அவைகளை ஒன்று சேர்த்தார். அப்பொழுது சபை விசுவாசத்தில் அசைந்து சென்றது. வெஸ்லி இரத்தத்தினால் அதை ஒன்று சேர்த்து, அதை இரத்தத்தினால் நிரூபித்தார். அப்பொழுது சபை பரிசுத்தமாக்கப்பட்டது பெந்தெகொஸ்தேயினர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் விசுவாசம் கொண்டு, வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று விசுவாசித்து, வார்த்தையின் இரசாயனங்களை ஒன்று சேர்த்து வானில் பறந்தனர். அல்லேலூயா! அவர்களால் இதை சாதிக்க முடிந்தது. 43 இந்த மனிதர் ஏன் இதை செய்தனர்? லூத்தர் எப்படி இதை கண்டுபிடித்தார்? வெஸ்லி இதை எப்படி கண்டு பிடித்தார்? மற்றவர்கள் எப்படி கண்டு பிடித்தனர்? ஏனெனில் T மாடல் ஃபோர்ட் கார் தயாரிப்பதற்கு வேண்டிய பொருட்கள் பூமியிலே இருந்தன. காரை ஓடச் செய்வதற்கு அவசியமான மின்சாரம் இருந்தது. பூமியில் பெட்ரோல் இருந்தது, மற்றும் பிஸ்டன்களும் இதர இயந்திர சாமான்களும் இருந்தன, ஜெனரேட்டருக்கு கார்பன் இருந்தது. இந்த காரை தயாரிக்க அவசியமான பொருட்கள் அனைத்தும் இங்கிருந்தன. கவனியுங்கள், அது ஓடினது...அது தயாரிக்கப்பட்டது, சிருஷ்டிக்கப்படவில்லை. சிருஷ்டி கர்த்தராகிய தேவன் அதையெல்லாம் அங்கு வைத்திருந்தார். விஞ்ஞானத்தில் நம்பிக்கை கொண்டிருந்த மனிதர் அதை ஆராய்ந்து பார்த்தனர். அவர்கள் 'முடியாது' என்பதை ஏற்றுக்கொள்ளவேயில்லை. அவர்கள் அதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அது அவர்கள் இருதயத்தில் எழுந்த ஒரு வெளிப்பாடு. அது உண்மை யென்று நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர்கள் அதில் நிலைத்திருந்தனர். 44 அப்படித்தான் ஜான் வெஸ்லி 'பரிசுத்தமாக்கப்படுதல் என்பதை நிரூபித்தார். அதற்கு அவசியமான சாமான்கள் அதை கொண்டு வந்த தேவனுடைய வார்த்தை அங்கிருந்தன. அவர் அதை விசுவாசித்தார்! முழு சபையும் ஆங்கிலிகன் சபை இன்னும் மற்றவர்களும் அவரைப் புறக்கணித்தபோதிலும் அவர் அதில் உறுதியாய் நின்று அதை நிரூபித்தார். அதற்கு பின்பு தோன்றின் பெந்தெகொஸ்தேயினரிடம் அவசியமான சாமான்கள் இருந்தபடியால், பரிசுத்த ஆவி உண்மை என்பதை அவர்களால் நிரூபிக்க முடிந்தது. அவர்கள் வானில் சென்றனர். 45 நீங்கள் கவனித்தீர்களா, ஒரு விஞ்ஞான சாதனை மற்றொன்றை தொடர்ந்து, அதற்கு பதிலாக வந்தது. அது முன்பிருந்ததை விட உயர்ந்த நிலை மாத்திரமே. பாருங்கள்? போக்குவரத்தில் மோட்டார் வாகனம் குதிரை வண்டியை விட உயர்ந்த நிலை. அது மற்றதை தொடர்ந்து வந்தது. குதிரை சக்தி! ஆமென்! இது குதிரை சக்தி என்றால், தேவனுடைய வல்லமை எப்படியிருக்கும்? பரிசுத்த ஆவியின் வல்லமை எப்படியிருக்கும் உங்களை நீதிமானாக்கும் அதே பரிசுத்த ஆவியின் வல்லமைதான் உங்களை பரிசுத்தப்படுத்துகிறது. உங்களை பரிசுத்தப்படுத்தின அதே பரிசுத்த ஆவியின் வல்லமை தான் உங்களை அவருடைய பிரசன்னத்தினால் நிறைக்கிறது. இதில் விஞ்ஞானம் சிறிதளவும் கூட இல்லை. தங்கள் மொழியின் முதலெழுத்துக்களை அறியாதவர்கள் இதை கண்டுகொண்டனர். ஏன்? இவர்கள் ஆவிக்குரிய விஞ்ஞானிகள். ஆமென். அவர்கள் அதைக் கண்டனர், அவர்கள் விசுவாசித்தனர். உலகப்பிரகாரமான விஞ்ஞானி இதை கல்வியறிவினால் செய்தான். ஆனால் ஆவிக்குரிய விஞ்ஞானியோ இதை வெளிப்பாட்டினால் செய்தான். ஒருவன் கல்வியறிவினால், மற்றவன் வெளிப்பாட்டினால். ஓ, நாம் மட்டும் இதை திறந்து பார்த்தால், அங்கு எல்லாவிதமான சாமான்களும் உள்ளன. அது உண்மை. 46 அது எப்படி செல்கிறது, தேவன் எப்படி அதை சாதித்தார் என்று நாம் கவனிக்கிறோம். பெந்தெகொஸ்தேயினர் வானில் சென்றனர். அவர்கள் எப்படி... அப்பொழுது சபைக்கு சுகமளிக்கும் வரம், அந்நியபாஷை பேசுதல், வெளிப்பாடு, இன்னும் மற்ற ஆவிக்குரிய வரங்கள் திரும்ப அளிக்கப்பட்டன. லூத்தர் அதைக் குறித்து ஒன்றும் அறிந்திருக்கவில்லை. வெஸ்லியும் அதை குறித்து ஒன்றும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இதைப் போதிக்கவில்லை. இது அவர்களுடைய காலத்துக்குப் புறம்பான ஒன்று. ரைட் சகோதரர் நாட்களுக்கு முன்பு ஆகாய விமானத்தைக் குறித்து ஹென்றி ஃபோர்ட்டுக்கு என்ன தெரிந்திருக்கும்? பாருங்கள், அவர்களுக்கு தெரிந்திருக்காது. அதே விதமாக, ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி ஓட்டின் ஒருவனுக்கு, குதிரை பூட்டாத வண்டியைக் குறித்து ஒன்றுமே தெரிந்திருக்காது. அது இருக்குமென்று வேதாகமம் உரைத்துள்ளது. எனவே விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் அவர்கள் அதை சாதிக்க முடிந்தது. அது பூமியில் நடந்தபோது, தேவன் சபையில் ஒரு சாதனையை புரிந்தார். “காணப்படுகிறவைகள் தோன்றப்படாதவைகளால் உண்டாயின.” பாருங்கள், அதன் பிரதிபலிப்பு. 47 இப்பொழுது, கடந்த ஐம்பது ஆண்டுகளாக பெந்தெகொஸ்தே காலம் உலகம் பூராவும் எழுப்புதலை உண்டாக்கியுள்ளது. அதில் எல்லாவிதமான காரியங்களும் அடங்கியுள்ளன. அவர்கள் மத்தியில் சுகமளித்தல் காணப்படுகின்றது, வியாதி சுகமடைகின்றது, சப்பாணிகள் சுகமடைகின்றனர், குருடர் பார்வையைத் திரும்பப் பெறுகின்றனர். உலகம் அதை நம்பினது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா. அவர்கள் லூத்தரை நம்பவில்லை, வெஸ்லியை நம்பவில்லை, பெந்தெகொஸ்தேயினரை நம்பவில்லை. ஆனால் தேவனோ வேதாகமத்தை எடுத்து, அதை ஆராய்ச்சி செய்ய மனதுடைய ஒரு மனிதனிடம் ஒப்புவித்து, அது உண்மையென்பதை நிரூபித்தார். ஆமென். அதை நாம் நினைவில் கொள்ளவேண்டும், அதை நாம் விசுவாசிக்க வேண்டும், இவை முன்னடையாளங்கள் என்பதைக் காண வேண்டும். இப்பொழுது நாம் பெந்தெகொஸ்தே காலம் வரைக்கும் வாழ்ந்து விட்டோம். பெந்தெகொஸ்தே காலம், நான் ஏற்கனவே அங்கு நிரூபித்தது போல், லவோதிக்கேயா காலத்துக்குள் செல்கிறது. 48 ஆனால் இப்பொழுது வேறொன்று நடந்துவிட்டது. இப்பொழுது நமக்கு ஒரு விண்வெளி வீரன் இருக்கிறான். ஜான் க்ளென் என்பவனே நமது முதலாம் விண்வெளி வீரன். ஆகாய விமானம் அதன் அழுத்தம் அனுமதிக்கும் உயரம் வரைக்கும் செல்ல முடியும் என்று நாம் காண்கிறோம். ஆனால் விண்வெளிக் கப்பல் அணுசக்தியினால், ஒரு மேலான சக்தியினால், இயங்குவதால், அது விண்வெளி வீரனை, ஆகாய விமானம் கொண்டு செல்வதைக் காட்டிலும் மிக அதிக உயரம் கொண்டு செல்கிறது. அங்கு ஆகாய விமானம் செல்லவே முடியாது. அது உண்மை . மனிதனால் இதை சாதிக்க முடிந்தது. சரி. இப்பொழுது உலகப் பிரகாரமான காலத்தில் நமக்கு ஒரு விண்வெளி வீரன் இருக்கிறான். முன்பிருந்த செய்தியின் முடிவில் செய்தியாளன் எப்பொழுதும் தோன்றுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை நாம் அங்கு நிரூபித்தோம். இப்பொழுது நாம் விண்வெளி வீரன் காலத்தில் இருக்கிறோம். ஆமென், ஆமென்! 49 உங்கள் கண்கள் காணக்கூடாத உயரத்துக்கு விண்வெளி வீரன் செல்ல முடியுமென்றும், அங்கு அழுத்தம் இருந்தாலும் இல்லாமற்போனாலும் விண்வெளிக் கப்பல் செல்லும்மென்றும் விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. விண்வெளி வீரன் அழுத்தம் உண்டாக்கப்பட்ட ஒரு தொட்டியில் (Pressurized tank) உள்ளதால், அவன் அங்கு சென்று சுற்றிலும் உள்ள உலகங்களைக் காணமுடிகிறது. விண்வெளி வீரன்! ஓ, என்னே, வந்து கொண்டிருக்கும் காலம் எத்தகையது! ஆம், ஐயா, இந்த இயற்கையான காரியங்கள் அனைத்தும் கடந்து மேலே செல்லுதல். அது எதற்கு எடுத்துக்காட்டாய் உள்ளது? தேவன் ஆவிக்குரிய விண்வெளி வீரர்களைப் பெற்றுக் கொள்ளப்போகும் ஒரு ஆவிக்குரிய காலத்திற்கு ஆவிக்குரிய நேரத்துக்கு. ஆமென்! அவர்கள் இப்பொழுது இங்குள்ளனர்! அல்லேலூயா! எந்த பறவைக்கும் மேலாக, எல்லாவற்றிற்கும் மேலாக பறந்து செல்லக்கூடிய ஆகாயத்து கழுகுகள்! தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நிரூபிக்கக் கூடிய ஆவிக்குரிய விண்வெளி வீரர்கள் மகிமை! விண்வெளி வீரர் ஒ, என்னே! (மகிமை)! இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு நல்லுணர்வைத் தருகிறது! ஆவிக்குரிய விண்வெளி வீரருக்கு இது எவ்வளவு அற்புதமான காரியம் பாருங்கள்? அது என்ன? உலகத்திலுள்ள விஞ்ஞானிகள் என்ன செய்தனர்? அவர்கள் இதை சாதிக்க முடிந்தது. வேதாகமத்தில் நிலை நின்று “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று சொல்லி யார் என்ன கூறினபோதிலும், அஞ்சாமல் வாக்குத்தத்தத்தில் உறுதியாய் நிற்கும் மனிதனின் மூலம் தேவன்; அது என்ன? நீங்கள் ஸ்தாபன கருத்துக்களை கடந்து மிக அதிக உயரம் செல்லும் விண்வெளி வீரராகி விடுகின்றீர்கள். அது எல்லாவற்றையும் கடந்து சென்ற ஒன்று. அது சபையின் காரியங்களைக் கடந்த ஒன்று. நீங்கள் மேலே தேவனுடன், அவருடன் மாத்திரம் தங்கியிருக்கிறீர்கள் விண்வெளி வீரர்கள்! 50 இதை நினைவில் கொள்ளுங்கள், ஒரு விண்வெளி வீரன் ஆவதற்கு அவர்கள் ஒரு தொட்டியில் புகுந்து கொள்ளவேண்டும். அவர்கள் தங்களையே இயக்கிக் கொள்ள முடியாது. விண்வெளி வீரனை விண்வெளிக்குத் தூக்கிச் செல்ல ஒரு ராடார் சக்தி (radar power) ஒரு அணுசக்தி அவசியமாயுள்ளது. அதன் பிறகு, அவன் கோபுரத்திலிருந்து (tower) இயக்கப்படுகிறான். மகிமை! தேவனுடைய ஆவிக்குரிய விண்வெளி வீரர்களும் அவ்வாறே உள்ளனர். அவர்கள் ஒரு தொட்டிக்குள், ஒரு இடத்துக்குள். ஒரு சரீரத்துக்குள் புகுந்து கொள்கின்றனர். அதன் பிறகு அது அவர்கள் அல்ல. அது ஜான் க்ளென் அல்ல. அது அவன் புகுந்து கொண்டிருந்த தொட்டி. அது அந்த இயந்திரம். அவன் அதில் உட்கார்ந்து கொண்டான். அவன் ஒன்றும் செய்யவில்லை. அவன் மேலே சென்று “அது உண்மை' என்று சொல்லக்கூடிய உண்மையான தைரியம் அவனுக்கிருந்தது. ஏனெனில் விஞ்ஞானம் அதை நிரூபித்திருந்தது. 51 மனிதர் கிறிஸ்துவுக்குள் வந்து, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசித்து, தங்கள் சுய கருத்துக்களின் மேல் சார்ந்திராமல், விண்வெளிக்குச் சென்று பரிசுத்த ஆவியினால் இயக்கப்பட வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். ஆமென், விண்வெளி வீரர்கள்! வ்யூ! அது குதிரை வண்டியிலிருந்து எவ்வளவு தூரம் வந்து விட்டது! அது ஆகாய விமானத்திலிருந்தும் கூட எவ்வளவு தூரம் வந்துவிட்டது! அது நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகளிலிருந்து எவ்வளவு தூரம் வந்து விட்டது! அவர்கள் கழுகுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் முதலில் பல்லிகளாக இருந்தனர், அதன் பிறகு அவர்கள் கோழிக் குஞ்சுகளாயினர், அதன் பிறகு அவர்கள் காகங்களாயினர், ஆனால் இப்பொழுதோ அவர்கள் கழுகுகளாயுள்ளனர். யாருமே அவர்களைப் பின் தொடர்ந்து மேலே செல்ல முடியாது! 52 கழுகு ஒரு சிறப்பான பறவை. அது மற்றெந்த பறவையைக் காட்டிலும் உயர பறக்க முடியும். அது எவ்வளவு உயரம் சென்றாலும், தலையை மட்டத்தில் வைத்து காண முடியும். சில ஜனங்கள் மேலே தாவி, அந்த உயரத்தை அடைந்த பிறகு, அவர்கள் எங்குள்ளனர் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை ஏனெனில் அவர்கள் தாவின் உயரத்திற்கும் அப்பால் அவர்களால் காண முடிவதில்லை. ஆனால் சிலரோ பின்நோக்கிப் பார்த்து என்ன நடக்கிறதென்பதை அறிந்துகொள்ள முடியும். அதுதான் கழுகு. கழுகு ஓரிடத்தில் நின்று சுற்று முற்றும் பார்த்து, அது என்ன கூற வேண்டுமென்று ஒரு செய்தியை கேட்கும்வரைக்கும் காத்திருக்கும். அவன் தான் தேவனுடைய விண்வெளி வீரன். பாருங்கள்? அது மற்றெல்லா சாதனைகளையும் தொடர்ந்து வரும்போது, இந்த சாதனையை மாத்திரம் ஏன் தொடராமல் இருக்க வேண்டும்? 53 இயேசுவுக்காக விண்வெளி வீரர்கள். அவன் தன் சொந்த சக்தியினால் செல்வதில்லை. அவன் விண்வெளிக்கு வேறொரு சக்தியினால் தள்ளி விடப்படுகிறான். அவன் செய்யும் ஒரே ஒரு காரியம் அவன் அதில் புகுந்து கொள்கிறான். அதை மாத்திரமே அவன் செய்ய வேண்டும்.தேவன் அவனைத் தள்ளிவிடுவதையும் சரியான சுழற்பாதையில் வைப்பதையும் குறித்து கவனித்துக்கொள்வார். அது பெட்ரோல் சக்தி அல்ல, சபை கோட்பாடு அல்ல. தேவனுடைய அணுசக்தி உங்களை விண்வெளிக்குள் தள்ளிவிடுகிறது. ஆமென். ஓ! ஏன், இந்த வீரர்களில் என்ன உள்ளது? அவர்கள்.... அவர்களுக்கு அவசியமில்லை .... அவன் நீதிமானாக்கப்படுதல் என்னும் சொல்லையும், பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் சொல்லையும் ஏற்றுக்கொண்டுவிட்டான். அவன் முழு வேதாகமத்துக்குள்ளும் புகுந்து விட்டான். ஆமென்! அவன் எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து விட்டான். ஏனெனில் தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று அவன் நிச்சயமாய் அறிந்திருக்கிறான், அவன் உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்கிறான், ஓ, என்னே! வார்த்தையானது தன்னை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். நீ ஒரு விண்வெளி வீரனாயிருந்து வியாதிப்பட்டிருந்தால், இதை நினைவில் கொள். கிறிஸ்துவுக்குள் இறங்கி, இறங்கும் வரிசையில் எண்ணுதல் முடியும் வரைக்கும் காத்திரு . அவ்வளவுதான். அவர் வெடியைச் சுடுவார். கவலைப்படாதே. இப்பொழுது, தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருந்ததனால், அதை சாதிக்க முடிந்தது. 54 இப்பொழுது, பழங்காலத்து குதிரை சக்தி, மோட்டார் வாகன சக்தி, விமான சக்தி இவைகளைக் காட்டிலும் விண்வெளிக்கு செலுத்தும் சக்தி எவ்வளவு பெரிது! பாருங்கள், விண்வெளி வீரன் மிக உயர செல்வதனால், குதிரை வண்டியில் செல்லும் மனிதன் காணக்கூடாதவைகளை அவனால் காண முடிகிறது. அது மிக உயரம் செல்வதனால், காரில் செல்லும் மனிதன் காணக் கூடாதவைகளை அவனால் காண முடிகிறது. அவன் மிக உயரம் செல்வதனால், விமானத்தை ஓட்டும் மனிதன் காணக்கூடாதவைகளையும் அவனால் காண முடிகிறது. அவன் யோசனைக்கு அப்பால் சென்றுவிட்டான். ஆமென். மகிமை! அதுதான். அவன் மனிதன் சிந்திக்கவும் முடியாத எந்த சாதனைக்கும் அப்பால் சென்று விட்டான். ஸ்தாபனங்கள். ''நீ மெதோடிஸ்டாக இருக்க வேண்டும், பாப்டிஸ்டாக இருக்க வேண்டும், இதை சேர்ந்திருக்க வேண்டும், ஒருத்துவத்தை, இருத்துவத்தை சேர்ந்திருக்க வேண்டும்“ என்பதற்கு எல்லாம் அப்பால் சென்றுவிட்டான். அது ஒரு விண்வெளி வீரன். அவன் விண்வெளியை அடைந்து விட்டான். ஆமென். நான் எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்! 55 இதை நினைவில் கொள்ளுங்கள், விண்வெளி வீரன் ராடார் சக்தியினால் இயக்கப்படுகிறான். அவர்கள் ஜான் க்ளென்னை கீழே கொண்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். நான் கேப் கானெவராலில் அந்த பெரிய ராடாரைக் கண்டேன். அவனை நீங்கள். எங்கும் காணமுடியாது. ஆனால் ராடார் சுட்டிக்காட்டும் திசையிலிருந்து அவன் எங்கே இருக்கிறான் என்பதை உங்களால் கூற முடியும் பாருங்கள்? நமக்கும் கூட ஒரு ராடார் உண்டு, அதுதான் ஜெபம். ஜெபம் தான் விண்வெளி வீரனை வழிகாட்டும் ராடார் சக்தி.“என் நாமத்தினாலே பிதாவை வேண்டிக் கொள்ளுவதெதுவோ, அதை நான் செய்வேன் ”பாருங்கள்? ஜெபம் ஏறெடுக்கப்படும் விதத்தைப் பாருங்கள், அவன் எத்திசையை சுட்டிக்காட்டுகிறான் என்பதைக் காணலாம். ஆமென். சபை ஜெபிக்கும் விதத்தைப் பாருங்கள், அப்பொழுது எத்திசையில் விண்வெளிக் கப்பல் பறக்கின்றது என்பதைக் காணலாம். விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் விதத்திலிருந்து, சபை ஜெபிக்கும் விதத்திலிருந்து உங்களால் அதை கூற முடியும். ஒருவன், “கர்த்தாவே, இவைகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை” என்று ஜெபித்தால், உ , ஓ! அந்த விண்வெளி வீரன் கீழே வருகிறான். அவ்வளவுதான். ஓ, சகோதரனே! ஆனால் தேவனாலே எல்லாம் கூடும் என்றுள்ளபோது, “கர்த்தாவே, உம்முடைய ஆவியை எங்கள் சபையின் மேல் ஊற்றி எங்களுக்குத் தேவையானதை தந்தருளும். பரிசுத்த ஆவியை எங்கள் மேல் ஊற்றி, எங்களுடைய எல்லா சிந்தனைகளையும் அகற்றி வார்த்தை உண்மையென்று விசுவாசிக்கும்படி செய்யும். நாங்கள் அதில் உறுதியாய் நிற்கப்போகிறோம்” என்று ஜெபித்தால் அந்த ராடார் திரை தன் தலையை இப்படி உயர்த்துவதை நீங்கள் காணலாம், பாருங்கள். விண்வெளி வீரன், வானில் உயர உயர சென்று கொண்டிருக்கிறான். அற்புதமானது! அது எந்த ஸ்தாபனத்துக்கும், எந்த கோட்பாட்டுக்கும் மேலே சென்று விடுகிறது. 56 இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நீதிமானாக்கப்படுதல் என்பது கோட்பாடாகிவிட்டது. அது உண்மை லூத்தரன்களும் - அவர்களை சேர்ந்த உபகிரகங்களில் (Satellite) ஒன்று நீதிமானாக்கப்படுதலைக் குறித்து விசுவாசிப்பது போல் நீங்களும் விசுவாசிக்கிறீர்கள். அவர்கள் உபகிரகங்கள் தான். ஆனால் தரையை விட்டு அவர்கள் உயர செல்லவில்லை. நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதலையும் அவர்களுடைய உபகிரகங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். 'லூத்தரன்களின் உபகிரகங்கள் யார்?' என்று நீங்கள் கேட்கலாம். நல்லது, கிறிஸ்து சபையும் அங்குள்ள அந்த கூட்டமும். “வெஸ்லிக்கு, அதாவது மெதோடிஸ்டுகளுக்கு உபகிரகங்கள் யார்?' 'நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர், மற்றும் அவர்களைச் சார்ந்தோர். அதன் பிறகு ஆகாய விமானமாகிய பெந்தெகொஸ்தே யினரும் அவர்களுடைய உபகிரகங்களும் நிச்சயமாக, ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக்காரர் நான்கு சதுரம், தேவ சபை. இவையனைத்தும் கோட்பாடுகளைக் கொண்ட ஸ்தாபனங்கள். 57 ஆனால் விண்வெளி வீரனோ ஒலித்தடையை உடைத்துக் கொண்டு செல்கிறான். அவன் சென்றுகொண்டேயிருக்கிறான் அவனுக்கு எதுவும் கேட்பதில்லை. ஓ, என்னே! அவன் இவை அனைத்தையும் கடந்து செல்கிறான். பாருங்கள், அவன் மிக உயரச் சென்று அங்கிருந்து எல்லா பொருட்களும்.... அவன் தேவனுடைய சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆம், ஐயா. அவர் அதை வாக்களித்தார், அவர் பிரதான ஆசாரியன் என்று அவருடைய வார்த்தை உரைக்கிறது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த பெரிய ராடார் அசைவதை நீங்கள் காண்கிறீர்களா? அவரை கூட்டத்தில் கவனியுங்கள். அவர் வாக்களித்தபடியே பரிசுத்த ஆவியானவர் அக்கினி ஸ்தம்ப வடிவில் இறங்கி வரும்போது நீங்கள் காணலாம். ஒரு மனிதன். ஒரு உண்மையான விசுவாசி, அங்கு உட்கார்ந்து கொண்டு, அதை விஞ்ஞானத்தினால் சிந்திக்க முயற்சி செய்யமாட்டான். அவர் யார்? அவர் ராடார் திரை. அவரை கவனியுங்கள். அவர் சுட்டிக்காட்டத் தொடங்குகிறார். ஆமென். அந்த விண்வெளி வீரர் அங்குள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து, ''உனக்கு புற்றுநோய் உள்ளது. உனக்கு இன்னின்னது உள்ளது. நீ இன்னார் இன்னார். நீ இந்த இடத்திலிருந்து வருகிறாய். கர்த்தராகிய இயேசு உன்னை சுகமாக்குகிறார்“ அல்லேலூயா! என்று சொல்லி விட்டு பறந்து செல்கிறார். விண்வெளி வீரர்! ஓ, என்னே, அது எப்படிப்பட்ட சபையாக இருக்க வேண்டும்! அது இங்குள்ளது. 58 இந்த சாதனை விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை உலக கண்காட்சியில் காண்பித்தனர். அதை நாம் பெற்றுள்ளோம். ஆமென். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் விண்வெளி வீரர் காலம் எல்லாவிடங்களிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. பாருங்கள், ''அது தோன்றப்படாதவைகளால் உண்டாக்கப்பட்டது.'' பாருங்கள், அது பரலோகத்திலுள்ள ஏதோ ஒன்றைக் கொண்டு உண்டாக்கப்பட்டது. தேவனே ஆறாம் பரிமாணத்தில் இங்குள்ளார். அது தேவனுடைய வல்லமை. நாம் ஒரு நிலையை அடைந்து, கல்லறைக்கு சென்று அழுவதும், கதவுகைப்பிடியில் மெல்லியபட்டுத் துணியை கட்டி சதாகாலமும் விடை பெறுவதும் போன்ற செயல்களைக் கடந்து அந்த பரிமாணத்துக்குள் உயர்த்தப்பட்டு விட்டோம். அல்லேலூயா! நாம் விண்வெளி வீரர்களாகி மேலே பறந்து சென்று அது எங்குள்ளது என்பதைக் கண்டு, திரும்பி வந்துவிட்டோம். மகிமை! நாம் ஆகாயத்துக்கும் அப்பாலுள்ள, மனித ஞானத்துக்கும் எட்டாத அந்த வீட்டுக்குச் செல்லப் போகிறோம். அங்கு வயோதிபர் ஒரு நொடிப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் மறுரூபமடைவார்கள். அங்கு வயோதிப மனிதரையும் ஸ்திரீகளையும் நாம் வாலிபராக காண்போம். “உங்களுக்கு எப்படி தெரியும்?” வேதம். அதைப் போதிக்கிறது. தேவன் ஒரு விண்வெளி வீரனை அங்கு செலுத்தினார், அது என்னவென்று நமக்குத் தெரியும், அவன் திரும்பி வந்தான். மரணத்தைக் குறித்து நமக்குக் கவலையில்லை. மரணம் என்பது ஒன்றுமில்லை. நிச்சயமாக, அது வாழ்தலே. ஆம், ஐயா. அது நாம் செல்வதற்கு நமது பாதங்களை தரையை விட்டு உயர்த்துவதாகும். ஓ, எவ்வளவு அற்புதமானது! 59 அவர் இவையனைத்தையும் தமது வார்த்தையில் வாக்களித்துள்ளார். 'அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்“ என்று எபி. 13:8 உரைக்கிறது. தேவன் சாதிக்க வல்ல காரியங்கள் அனைத்தையுமே, தேவனுடைய வார்த்தைக்கு தன்னை முழுவதுமாய் ஒப்புவித்த ஒரு மனிதனின் மூலம் அவர் சாதித்திருக்கிறார். ஏனெனில், நான் நேற்றிரவு கூறினது போல், அவர் எப்பொழுதும் வார்த்தையை உறுதியாய் ஆதரிக்கிறார். விண்வெளியில் செல்லுதல் என்பது புதிய ஒரு காரியமல்ல என்று உங்களுக்குத் தெரியுமா?எலியாவைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவன் விண்வெளி வீரனாக இல்லாமல் போனால், நான் விண்வெளி வீரன் ஒருவனைக் கண்டதேயில்லை ஜான் க்ளென் போக நினையாத இடத்துக்கும் அவன் சென்றான். நல்லது, உங்களுக்குத் தெரியுமா, ஒருவன் ஒரு சமயம் மெதுவாக மேலே சென்றான். அவனுடைய பெயர் ஏனோக்கு அவன் நடந்து மேலே சென்றான், ஆனால் அவன் ஒரு விண்வெளி வீரன். நிச்சயமாக. அவன் அழுத்தம் கொண்டவனாயிருந்தான். அவன் மாற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவன் நடக்கத் தொடங்கின போது ஏற்கனவே அழுத்தத்தை பெற்றிருந்தான். அவன் நடந்து எல்லா பரிமாணங்களையும் கடந்து, தேவனுடைய சமுகத்தை அடைந்தான். ஒரு கிழவன் களைப்புற்றவனாய் சரியாக நடக்க முடியவில்லை. அவன் யேசபேலுடன், அவளுடைய குட்டை தலைமுடியைக் குறித்தும் முகவண்ணத்தைக் குறித்தும் வாக்குவாதம் செய்தான். தேவன் ஒரு இரதத்தை கீழே அனுப்பி, “இன்று பிற்பகல் மேகங்களின் வழியாக அந்த இரதத்தில் சவாரி செய்து மேலே வர உனக்கு அனுமதியளிக்கிறேன்” என்றார் விண்வெளி வீரன்! 60 ஒரு சமயம் நம்மெல்லாருக்காகவும் மரிக்க ஒருவர் வந்தார். தேவன் அவரை மூன்றாம் நாளில் எழுப்பினார். அவர் மேகங்களின் மேல் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரு சத்தம் “நான் மறுபடியும் வருவேன்” என்றுரைத்ததை அங்கு நின்று கொண்டிருந்த ஐந்நூறுபேர் கண்டனர். ஒரு தேவதூதன் திரும்ப வந்து, ''வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைமை விண்வெளி வீரராகிய இந்த இயேசுவானவர் அப்படியே, அதே விதமான வாசஸ்தலத்தில், சாகாமையைத் தரித்துள்ள ஒரு சரீரத்தில் மறுபடியும் வருவார்'' என்றான். அல்லேலூயா!“ அவருடைய மகிமையின் சரீரத்துக்கு ஒத்த ஒரு சரீரத்தை நாம் பெற்றிருப்போம். ஏனெனில் அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். 'ஓ, அல்லேலூயா! அவர் எல்லா ஒலித்தடைகளையும், சிந்தனை தடைகளையும் உடைத்து, சிந்தனைக்கும் அப்பால், எல்லாவற்றிற்கும் அப்பால் சென்றார். 61 தேவனுக்காக வாழும் எந்த மனிதனும் ஐம்புலன்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அவன் கல்வியறிவையும், மனிதனின் சாதனையையும் கடந்து, தேவனை விசுவாசித்து, எல்லாவற்றையும் உடைத்து ஒருபுறம் வைத்து விட்டு, வானங்களில் பறந்து செல்ல வேண்டும். ஆமென். ஓ, விண்வெளி வீரர்களும் மற்றவர்களும் உலகப்பிரகாரமாய் சாதித்ததை, தேவன் ஆவிக்குரிய பிரகாரமாய் தமது சபையின் மூலம், விசுவாசிக்கும் ஆவிக்குரிய மக்களின் மூலம் சாதிக்க முடிந்தது. தேவனுடைய வார்த்தையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளத் துணியும் எந்த மனிதனும் ஸ்திரீயும் விண்வெளி வீரரே. அவர்கள், “ஓ, அது விவேகமற்றது. அந்த ஜனங்கள் அழுது கூச்சலிடுவதைக் கேட்டீர்களா? ஓ, அது மிகவும் விவேகமற்றது'' என்பார்கள். அதை புரிந்து கொள்ளாதவர்கள். 62 ஒருவர் என்னிடம், “சகோ பிரன்ஹாமே, அந்த இடத்தை நீங்கள் சொப்பனத்தில் கண்டிருப்பீர்கள்'' என்றார். நான் சொப்பனம் காணவில்லை. நான் அங்கு நின்று கொண்டு, கீழே நோக்கி நான் கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். ஒருக்கால் நான் படுக்கையின் மேல் சொப்பனம் கண்டிருக்கக் கூடும். ஆனால் நான் மேலே நின்று கொண்டு கீழே என்னைப் பார்த்தேன். பாருங்கள்? ஓ. அவர் அன்று காலை எனக்கு சிறு விண்வெளிப் பயணத்தை அருளி, எங்கு செல்ல வேண்டுமென்று எனக்குக் காண்பித்தார். அது எங்குள்ளது என்பதை உங்கள் ராடார் சரியாக காட்டும் என்பதை அது காண்பிக்கிறது. அது நானல்ல, அது அவர், உங்களில் உள்ள உங்கள் ஆவி அந்த செய்தியை விசுவாசிக்கிறது. நான் இருக்கும் இடத்தில் பரிசுத்த ஆவியானவர் நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் அதை அவ்விதம் விசுவாசிக்கும் போது, அது தொடர்பு கொள்கிறது; உங்களுக்கான பதில் புறப்பட்டு வருகிறது. விண்வெளி வீரன்! ஆமென். ஓ, எவ்வளவு அற்புதமானது! ஆம், ஐயா. 63 மகத்தானது, விஞ்ஞானம் ஒரு மகத்தான காரியத்தை செய்து விட்டது. உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் அதை மிகவும் மகத்தானதாக செய்து விட்டதனால், இப்பொழுது தங்களைக் குறித்தே பயந்திருக்கின்றனர். அது உண்மை . அவர்கள் மிகப்பெரிய சாதனை புரிந்து, அதன் விளைவாய் தங்களைக் குறித்தே பயந்திருக்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் “நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள் உள்ளன” என்றனர். அவர்கள் பயப்படுகின்றனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? இப்பொழுது மனிதன், விண்வெளி வீரனைக் கொண்டு விண்வெளிப் பயணத்தை சாதித்து விட்டான். ருஷியா இந்த நாட்டை, அல்லது வேறெந்த நாட்டை, எப்பொழுதாவது தகர்க்க நேர்ந்தால், விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சந்திரன் அடைந்துவிடலாமென்று மனிதன் எண்ணிக்கொண்டிருக்கிறான். 64 அன்றொரு நாள் மிகவும் அழகான ஒரு காரியத்தைக் கண்டேன், அது உண்மையில் மிகவும் அழகாயிருந்தது. இப்படி பானை போன்ற தொந்தியுடைய இரண்டு சிறு இந்தியர்கள். தலைக்கு பின்னால் ஒரு சிறகை சொருகிக் கொண்டு, ஒருவரோடொருவர் உரையாடிக் கொண்டிருந்தனர் அவர்கள் கைகுலுக்கி, ஒருவருக்கொருவர் முதுகை தட்டிக் கொடுத்து, “சகோதரனே, விரைவில் நாடு நம் கைவசம் வந்துவிடும். வெள்ளையன் சந்திரனுக்குப் போகிறான்” என்று பேசிக் கொண்டனர். அது நல்லது தான். 65 ஓ, அவர்கள் புகுந்து கொள்ள நிறைய விண்வெளிடப் பாக்களை (astronaut cans) செய்யவேண்டுமென்று விரும்புகின்றனர். அணுசக்தி காலம் வரும்போது, அவர்கள் உலகத்தை அழித்துவிடுவார்கள். அது நேரிடும் போது, இதை இழுத்துவிட்டு, சந்திரனுக்கு எல்லோரும் பயணம் செய்து, அங்கு வேறொரு சமுதாயத்தை உருவாக்கி விடலாமென்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் அங்கு செல்லப் போவதில்லை. அவர்கள் அங்கு செல்வார்கள் என்று எனக்கு மனப்பூர்வமான நம்பிக்கையில்லை. பாருங்கள்? ஆனால், அதே சமயத்தில், கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிறவன் தன் விண்வெளி வீரருக்குள் நுழைந்து விட்டான். ஆமென். “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே அந்த ஒரே விண்வெளி வீரருக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். ''ஓ, ஒரே சரீரம்! அது எந்த அழுத்தத்தையும் தாங்கிக்கொள்ளும். அவர்கள் அதை எரிகிற அக்கினிச் சூளையில் பரிசோதித்துப் பார்த்தனர், அது எரிந்து போகாமல் அக்கினியைத் தாங்கிக் கொண்டது. அந்த அக்கினிச் சூளை ஏழுமடங்கு சூடாக்கப்பட்டது. அவர்கள் அதை பரிசோதித்துப் பார்த்தனர், எல்லாமே சரியாக இருந்தது. எனவே அவர்கள் எதையும் தாங்கிக்கொள்ள முடியுமென்று ஆவிக்குரிய விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடிந்தது. எனவே உண்மையான விசுவாசி ஆவிக்குரிய விசுவாசி தேவனுடைய விண்வெளி வீரராகிய கிறிஸ்துவுக்குள் புகுந்து கொண்டு, எல்லாவற்றையும் விசுவாசித்து, தன் ஸ்தாபனக் கோட்பாடுகளை பெந்தெகொஸ்தே கோட்பாடுகளை, பாப்டிஸ்டு கோட்பாடுகளை, மெதோடிஸ்டு கோட்பாடுகளை - ஒருபுறம் தள்ளி வைத்து விடுகிறான். அவன் விண்வெளிக் கப்பலுக்குள் நுழைந்து கொண்டு,”கர்த்தாவே, இது எப்பொழுது ஆயத்தமாயிருக்கும்?'' என்கிறான். ஓ, என்னே! அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் இந்த சிறு கூட்டங்களுக்கு வந்து இறங்கு வரிசை எண்ணப்படும் தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறான். 66 உங்களுக்குத் தெரியுமா, அன்று காலை ஜான்ளென் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது அவர்கள், “பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு,ஒன்று, பூஜ்யம்'' என்று இறங்கு வரிசையில் எண்ணுவதை கேட்டுக் கொண்டிருந்தனர். பாருங்கள்? இப்பொழுது அவன், ''இன்னும் மூன்றே நிமிடங்களில் ஏதோ ஒன்று பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும்” என்று கூறப்படும் நிலைக்கு வந்து விட்டான். அவர்களுக்கு அது என்னவென்று தெரியவில்லை. “பூஜ்ய நேரம் வருவதற்கு இன்னும் மூன்று நிமிடங்கள்.” இப்பொழுது கவனியுங்கள், உண்மையான விசுவாசி கிறிஸ்துவுக்குள் இருக்கிறான். கிறிஸ்துவில் இருக்கிறவனுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. திருவசனத்தைப் பிரசங்கி, வசனத்தில் உறுதியாய் நில். ஸ்தாபனங்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் அதை விசுவாசிப்பார்கள். அவர்கள் அதில் உறுதியாய் நிற்பார்கள், ஏனெனில் அது வார்த்தை ஸ்தாபனங்கள் வீண் சந்தடி உண்டாக்கி அவர்களை சபை பிரஷ்டம் செய்து வெளியே துரத்தி ''இவர்கள் பைத்தியக்காரர்'' என்பார்கள். இருப்பினும் இவர்கள் வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருப்பார்கள். தேவன் அதை வாக்களித்துள்ளதால், அவர்கள் அதில் நிலைத்திருப்பார்கள், ஏனெனில் அவர்கள் விண்வெளி வீரர்கள். அவர்கள் வார்த்தையை விசுவாசிக்கின்றனர். அவர்களைத் தொலைத்துவிட ஒரு வழியும் இல்லை. அவர்கள் எப்படியும் உங்களை விட்டு போகத்தான் போகிறார்கள், எனவே அவர்களை சிறிது காலம் தனியே விட்டுவிடுங்கள். 67 ஆனால் அவர்கள் கிறிஸ்து இயேசுவில் உன்னதங்களில் உட்கார்ந்துகொண்டு, இறங்கு வரிசையில் எண்ணுவதை கேட்டுக் கொண்டிருக்கின்றனர், சபை காலங்கள் போன்றவைகளில். மகிமை! இது உங்களுக்கு நல்லுணர்வைத் தருகிறது. இல்லையா? இறங்கு வரிசையில் எண்ணுவதை கேட்டுக் கொண்டிருத்தல். இறங்கு வரிசையில் எண்ணுதல் என்றால் என்ன? 'வாக்களிக்கப்பட்டுள்ள இவையனைத்தும், இதோ இங்கே நிறைவேறிவிட்டன. வாக்களிக்கப்பட்டுள்ள இவையனைத்தும், இதோ இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அவர் இன்றைக்காக வாக்களித்துள்ள சாதனை அனைத்தும், இதோ நமது மத்தியில் காணப்படுகின்றன.'' அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? இறங்கு வரிசையில் எண்ணுவதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அது எவ்வளவு தூரம் வந்துள்ளது? லூத்தரின் காலம் முதற்கொண்டு இதுவரைக்கும் . இறங்கு வரிசையில் எண்ணுதல்! நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல்.... பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு...'' ஊப்! அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? விண்வெளிக்கு எடுத்துக்கொள்ளப்படும் பூஜ்ய நேரத்துக்காக காத்திருக்கின்றனர். ஆமென். 68 இந்த மகத்தான சுழற்பாதையில் சுற்றுவதற்கு சபையானது ஆயத்தமாகிக் கொண்டு, இறங்குவரிசையில் எண்ணுதல் நடந்து கொண்டிருக்கும் இம்மகத்தான நேரத்தில் இறங்கு வரிசையில் எண்ணுதல் என்றால் என்ன என்னும் என் கருத்தை உங்களுக்கு விளக்கிக் காண்பிக்க விரும்புகிறேன் அதை நாம் சற்று முன்பு சபையில் விவரித்தோம் என்று நினைக்கிறேன். நீங்கள் கவனிப்பீர்களானால், விண்வெளி வீரன் பூமியை விட்டுச் செல்ல ஆயத்தமாகும்போது பத்து முதல் பூஜ்யம் வரைக்கும் இறங்கு வரிசையில் எண்ணப்படுகிறது. இந்த செய்தியை விவரித்து இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்று விளக்க நான் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் இன்று காலை அதற்கு அதிக நேரம் பிடிக்கும். ஆனால் இதை மாத்திரம் உங்களுக்கு விளக்க விரும்புகிறேன், பத்து என்பது ''லெளகீக சிந்தையை“ குறிக்கும் எண். ஆனால் ஏழு என்பது ''தேவனுடைய பரிபூரணத்தைக்குறிக்கும் எண். அவர் ஆறு நாட்களில் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஒய்ந்திருந்தார்.'' ஆறாயிரம் ஆண்டுகளாக உலகமானது, இல்லை சபையானது, பாவத்தை எதிர்த்து பாடுபட வேண்டும், ஏழாவது, ஆயிரம் ஆண்டு அரசாட்சி, ஒய்வு நாள். 69 ஏழு என்பது தேவனுடைய பரிபூரண எண். அவர் நமக்கு சரியான இறங்கு வரிசையில் எண்ணுதலை கொடுத்திருக்கிறார். அவருடைய எண்ணுதல் பத்திலிருந்து அல்ல, ஆனால் ஏழிலிருந்து. அதை நாம் சற்று முன்பு ஏழு சபை காலங்களைக் குறித்து பிரசங்கிக்கும் போது கண்டோம். அதை நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் காணலாம் இறங்கு வரிசையில் முதல் எண்ணிக்கை முதலாம் சபை காலம், பிறகு இரண்டாம் சபை காலம், இப்படியாக ஏழாம் சபைகாலம் வரைக்கும். நமது கண்களுக்கு முன்னால் உள்ள இந்த வரையப்பட்ட சித்திரம், இறங்குவரிசையில் எண்ணுதல் நமக்கிருந்தது என்பதைக் காண்பிக்கிறது. முதலாவதாக எண்ணப்பட்ட எண் எபேசு சபை. இரண்டாவதாக எண்ணப்பட்ட எண் சிமிர்னா சபை. அதன் பிறகு பெர்கமு சபை, தீயத்தீரா சபை. ஐந்தாவது சர்தை சபை. ஆறாவது பிலதெல்பியா சபை. ஏழாவது லவோதிக்கேயா சபை, கடைசி சபை காலம். சபை காலங்கள் தங்கள் காலத்தை முடித்துக் கொண்ட பிறகு, சபை இவ்விடம் விட்டு செல்வதற்கு அது பூஜ்ய நேரம். தீயத்தீரா சபை காலம் வந்து போய் விட்டதென்று நாமறிவோம் , எபேசு சபை காலம் வந்து போய் விட்டதென்று நாமறிவோம், பிலதெல்பியா சபை காலம் வந்து போய்விட்டதென்று நாமறிவோம். இப்பொழுது நாம் ஏழாம் சபை காலமாகிய லவோதிக்கேயா சபை காலத்தின் முடிவில் இருக்கிறோம். அதுதான் இறங்கு வரிசையில் எண்ணுதல். 70 சபைகளைக் குறித்து நாம் முன்பு படித்த பாடங்களை நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் ஏழு நட்சத்திரங்களை தமது கரத்தில் ஏந்திக் கொண்டிருந்தார். அவை “ஏழு சபைகாலங்களில் இருந்த ஏழு ஊழியக்காரர் என்று நாம் பார்த்தோம். தேவன் இறங்கு வரிசையில் எண்ணினபோது, அவர்கள் ஒவ்வொருவரும் பிழையின்றி அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர். அவர் இவ்விடம் விட்டு சென்று, திரும்பி வரும் வரைக்கும், தமது நாமத்திற்கென்று ஒருகூட்டம் ஜனங்களை சேர்த்துக் கொண்டு வருகிறார். அது பெந்தெகொஸ்தே நாளில் துவங்கினது. முதலாம் சபையாகிய எபேசு சபை காலத்தின் நட்சத்திரமும் தூதனும் பரி.பவுல் என்று நாம் நம்புகிறோம். அவன் வந்து விட்டான், எனவே ஒன்று எண்ணப்பட்டுவிட்டது. இரண்டாம் சபையாகிய சிமிர்னா சபை காலத்துக்கு ஐரினேயஸ் என்னும் அந்தமகத்தான தேவனுடைய பரிசுத்தவான் தூதனாக விளங்கினான். அவன் அந்த சபை காலத்தை அதன்முடிவில் வழிநடத்தினான். மூன்றாம் சபை காலமாகிய பெர்கமு சபைக்கு பரி. கொலம்பா தூதன். அவன் தேவனுடைய பரிசுத்த தூதனாக விளங்கினான். இருளின் காலங்களில் துன்புறுத்தல் நடந்தபோது, அதுவே நான்காம் சபை காலம், நான்காம் எண் எண்ணப்பட்டது. துரோவைச் சேர்ந்த பரி. மார்டின் - பிரான்சு நாட்டில் தோன்றின அந்த மகா பரிசுத்தவான் அதன் தூதன் இறங்கு வரிசையில் எண்ணுதலில் ஐந்தாம் சபை காலத்தின் தூதனாக மார்டின் லூத்தரும், ஆறாம் சபையின் தூதனாக ஜான் வெஸ்லியும் விளங்கினர். 71 இப்பொழுது நாம் ஏழாம் சபை காலமாகிய லவோதிக்கேயா சபை காலத்தில் இருக்கிறோம். இறங்குவரிசையில் எண்ணுதலில், அந்த மகத்தான தூதனாகிய எலியா இரண்டாம் முறை வருவதற்கு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவன் வந்தவுடனே, சபையானது வீடு நோக்கிச் சென்று, விண்வெளியில் வானங்களின் வழியாக சந்திரன், நட்சத்திரங்கள் இன்னும் மற்றவைகளையும் கடந்து இயேசுவைச் சந்திக்கும். அவர்கள் எங்கிருந்து வந்து எங்கு செல்கின்றனர்? அவர்கள் இந்த விண்வெளிக் கப்பலாகிய இயேசுவுக்குள் நுழைந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் அவ்விதம் தான் அதற்குள் நுழைந்து கொள்ள வேண்டும். அது உண்மை . அவர்கள் முதலில் வந்த அதே வழியாகவே வர வேண்டும். ஏனெனில் இந்த மகத்தான ஜனக் கூட்டத்தின் மகத்தான சுழற்பாதை. நோவாவின் காலத்தில் ஒரே ஒரு கதவு மாத்திரமே இருந்தது. உள்ளே பிரவேசிப்பதற்கு அந்த ஒரு கதவு மாத்திரமே இருந்தது. உள்ளே பிரவேசிக்கும் ஒவ்வொன்றும் —- அது நீதிமானாக்கப்படுதலின் கீழ் முதல் தட்டிற்கு சென்றாலும், அல்லது இரண்டாம் மூன்றாம் தட்டிற்கு சென்றாலும் —- அந்த ஒரு கதவு வழியாக மாத்திரமே பிரவேசித்தன. அவையனைத்தும் அதே வழியாக பிரவேசித்தன. 72 இந்த விண்வெளி வீரனின் நாட்களிலும் அப்படித்தான். நாம் ஒரே வழியாக வந்து, ஒரே வழியில் உட்பிரவேசிக்க வேண்டும் - பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்றுக்கொண்ட அதே செய்தி, அதே கிறிஸ்து, அதே வல்லமையின் வழியாக. அதே வழியாக! எல்லா காலங்களிலும் அவர் ஒருவரே, ஏனெனில் அது அதே வாசல். இந்த சரீரத்துக்குள் நாம் எப்படி பிரவேசிக்கிறோம்? வாசலின் வழியாக. இயேசுவே இந்த சரீரத்துக்கு வாசல். எனவே நாம் இயேசு கிறிஸ்து என்னும் வாசலின் வழியாய் உட்பிரவேசித்து தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கிறோம். இப்பொழுது, லவோதிக்கேயா சபை காலத்தில், கடைசி எண்ணுதலின்போது, வாசல் அடைபடவிருக்கிறது, சபையானது உபத்திரவங்களுக்கு மேலாக சுழற்பாதையில் எடுக்கப்பட்டு, வானாதி வானங்களில் பறந்து சென்று, தேவனுடைய மார்பை அடைய ஆயத்தமாயுள்ளது. ஆமென் (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). 73 ஆமென். இந்த ஜான் க்ளென் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட அன்று காலை, எல்லோரும் முகங்குப்புற விழுந்து அழுது ஜெபித்து, அவன் என்ன சாதிக்கப்பட போகிறான் என்று வியந்தனர். கேப்கான வெரால் என்னுமிடத்தில் அந்த பெரிய விண்வெளிக் கப்பல் உயர்த்தப்பட்ட போது, அந்த அணுக்களிலிருந்து தீ பரவத் தொடங்கினது. அது ஆகாயத்தில் அப்படி செல்வதை ஜனங்கள் கண்ட போது, அவர்கள் அழுது புலம்பி, மேலே செல்லும் அவர்களுடைய விண்வெளி வீரனுக்கு என்ன நேரிடுமோ என்று வியந்தனர். ஓ, ஆனால் சபையும் கூட, மகிமை, தீ பரவச் செய்கிறது. ஆமென். இறங்கு வரிசையில் எண்ணுதல் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது! ஆமென்! ''நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்தஆவியின் அபிஷேகம், லவோதிக்கேயா சபை காலம். நாம் முடிவுக்கு வந்து விட்டோம்! இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்! காரியம் என்ன? ''பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு.... பூஜ்யம்!'' அவர்கள் அழுது கொண்டிருக்கமாட்டார்கள். சபையானது இயேசு கிறிஸ்துவுடன் கூட இருக்க விண்வெளி அசைவை உண்டாக்கி ஆகாயத்தில் செல்லும்போது, அவர்கள் ஆர்ப்பரித்துப் பாடி தேவனைத் துதித்துக் கொண்டிருப்பார்கள். ஆமென். 74 இந்த இயற்கை சாதனையில், அவர்கள் சந்திரனை நோக்கி செல்கின்றனர். ஆனால் ஆவிக்குரிய சாதனையில் நாம் பரலோகத்தை நோக்கி செல்கிறோம். ஆமென்! இயற்கை விண்வெளி வீரன் தனக்கு சந்திரனில் ஒரு இடத்தை தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால் நமக்கோ பரலோகத்தில் ஏற்கனவே ஒரு இடம் உண்டு. “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின் பின்பு, ஒரு விண்வெளி கப்பலை அனுப்பி உங்களைச் சேர்த்துக் கொள்வேன்.” இறங்கு வரிசையில் எண்ணுதல் துவங்கிவிட்டது! அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆமென். இறங்கு வரிசையில் எண்ணுதல்! “பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று, பூஜ்யம்.” தீ பரவத் தொடங்குகிறது, ஊழியம் மகிமையில் முடி சூடப்படுகின்றது. அல்லேலூயா! பழைய ராக்கெட் மேல் நோக்கிச் செல்கிறது. சந்திரனை நோக்கி அல்ல, மகிமையை நோக்கி. அது மேலே பறக்கிறது, தேவனுடைய அக்கினி பரவுகின்றது. பரிசுத்த ஆவியின் வல்லமை அதை சந்திரன், நட்சத்திரங்கள், இன்னும் மனிதன் இதுவரை அடையாத உயரத்துக்கு தூக்கிச் செல்கிறது. ஒரு நாள் காலையில் சபையானது பறந்து சென்று பரலோகத்திலுள்ள தேவனுடைய மார்பை அடையும். நண்பர்களே, மனிதன் இயற்கையான காரியங்களைக் கொண்டு தன்னால் முடிந்ததை சாதித்து விட்டான். தேவனோ (நான் இங்கு நிரூபித்தது போன்று) அதை ஆவிக்குரிய காரியத்துக்கு எடுத்துக்காட்டாக வைத்துள்ளார். 75 நாம் விண்வெளி கப்பலுக்குள் வேகமாக நுழைந்து கொள்வோம். இன்னும் சிறிது காலத்தில் கதவு அடைபடும் இறங்கு வரிசையில் எண்ணுதல் நடந்து கொண்டிருக்கிறது! விஞ்ஞானம், அதன் எண்ணுதல் மூன்று நிமிடங்கள் என்கிறது. நம்முடைய எண்ணுதல் அதையும் தாண்டியிருக்ககூடும். அது ஒருக்கால் ''ஒன்று'' என்று எண்ணப்பட்டு ''பூஜ்யம்'' என்று எண்ணப்பட ஆயத்தமாயிருக்கும். நாம் உள்ளே வருவோம் இறங்கு வரிசையில் எண்ணுதல் நடந்துகொண்டிருக்கிறது என்பதை விசுவாசிக்கிறீர்களா? நாம் சிறிது நேரம் தலை வணங்குவோம். பிதாவே! 'பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு ...'' தேவனே! நாடுகள் உடைகின்றன. இஸ்ரவேல் விழித்தெழும்புகிறது. இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம். புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில் எங்கும் சூழ்ந்துள்ளது. ஓ, சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள். ''என்ன ஒரு நாள்! சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கின்றது. ஓ தேவனே, ஒவ்வொரு அவிசுவாசியும் தன் கல்வியறிவு கொண்ட கருத்துக்களை, உமது வார்த்தைக்கு முரணாயுள்ள கருத்துக்களை வேகமாக தள்ளிவிட்டு, இன்று காலை இந்த மகிமையான விண்வெளி கப்பலுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஏனெனில் நாங்கள் விண்வெளி வீரரின் ஒருபாகமாக இருக்க, இவருக்குள் பிறந்ததிருக்கிறோம். 76 பரோலகப் பிதாவே, இன்று விசுவாசிகளை பரிசுத்த ஆவியினால் இந்த மகத்தான இயேசுகிறிஸ்துவின் சரீரத்துக்குள் ஞானஸ்நானம் பண்ண வேண்டுமென்று ஜெபிக்கிறேன். தண்ணீர்குளம் இன்று காலை ஜனங்களால் நிறைந்து, இவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அடக்கம் பண்ணப்பட்டு, சந்திரனையும் நட்சத்திரங்களையும், கோட்பாடுகளையும் ஸ்தாபனங்களையும் கடந்து செல்லும் அந்த பழைய விண்வெளிக் கப்பலுக்குள் பிரவேசிப்பார்களாக. எங்களுக்கு இறங்கு வரிசையில் எண்ணுதல் இருந்து வந்துள்ளது. அந்த மூன்று கட்டங்கள் என்னவென்பதை எங்களுக்கு நீர் கூறியிருக்கிறீர். சபை காலங்கள் எவ்விதம் செல்லும் முதலாம் சபை காலம், இரண்டாம் சபை காலம், மூன்றாம் சபை காலம், நான்காம் சபை காலம், ஐந்தாம், ஆறாம் சபை காலங்கள் என்று கூறியிருக்கிறீர். இப்பொழுது ஏழாம் எண்ணிக்கை. ஏழு எண்ணப்படும் இந்த காலத்தில். கடைசி சபை காலத்தில் நாங்கள் இருக்கிறோம். இறங்கு வரிசையில் எண்ணுதல் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. முன்சென்ற காலங்கள் எண்ணப்பட்டு விட்டன. லூத்தரன் காலம், வெஸ்லி காலம், பெந்தெகொஸ்தே காலம். இப்பொழுது கர்த்தாவே, பெரிய பூதக் கண்ணாடி முன்னால் வைக்கப்பட்டிருக்கும் அந்த விண்வெளிக் கப்பலுக்குள் ஜனங்கள் ஒன்று சேருவதையும், நாங்கள் மகிமையையும், இயேசுவையும் அவருடைய எல்லா வல்லமையுடனும், அவருடைய எல்லா வாக்குத்தத்தங்களுடன் காண முடிகிறது. அவர் வாக்களித்த ஒவ்வொன்றும் எங்களில் பிரதிபலிக்கிறது. இதற்காக நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 77 தேவனே சபையானது இன்றே பாதுகாப்பான மண்டலத்துக்குள் (Safety zone) வேகமாக பிரவேசிப்பதாக. ஏனெனில் பூஜ்ய நேரம் விரைவில் வருகிறது. அப்பொழுது விண்வெளிக் கப்பலின் கதவு அடைக்கப்படும். நோவா தன் விண்வெளிக் கப்பலுக்குள் பிரேவசித்து நியாயத்தீர்ப்பின் தண்ணீர்களுக்கு மேல் மிதந்தது போல நாங்களும் செய்வோம். பிதாவே, நாங்கள் உமக்குள் பிரவேசித்து காலம் என்னும் ஆற்றின் வழியாக மிதந்து, 'மில்கி வேயில் உள்ள மார்ஸ், ஜூபிடர், வீனஸ் போன்ற கிரகங்களையும் உலகப்பிரகாரமான விண்வெளி வீரன் அறிந்திராத இடங்களையும் கடந்து செல்ல விரும்புகிறோம். அவன் இதை ஒரு அடையாளத்துக்காக செய்ய அவனை நீர் அனுமதித்தீர் என்றும், நாங்கள் போவதற்கு ஆயத்தமாயிருக்கிறோம் என்றும் அறிந்திருக்கிறோம். நாங்கள் பூமியை விட்டு சென்று கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, இதை அருளும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் இதைக் கேட்கிறேன். 78 கர்த்தாவே, இங்கு உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை வியாதியஸ்தர் அனுப்பின்வை. கர்த்தாவே, அவர்கள் விசுவாசிக்கின்றனர். இவர்கள் தாமே இன்று காலை முழு உறுப்பினர் விண்வெளி வீரர்களாக ஆவார்களாக. அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து வியாதிக்காரர் மேல் போட, வியாதிகள் அவர்களை விட்டு நீங்கிப்போயின் என்னும் வேதத்திலுள்ள தமது வசனத்தை இதன் மேல் பிரதிபலிக்கும் சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமை; இந்த உறுமால் விண்வெளி வீரன் விசுவாசியைத் தொடும் மாத்திரத்தில் அவன் வியாதியை பின்னே விட்டுவிட்டு பறந்து செல்வானாக. கர்த்தாவே, இங்குள்ள வியாதியஸ்தர் ஒவ்வொருவரும் இப்பொழுதே கிறிஸ்து இயேசுவுக்குள் நுழைந்துகொண்டு, “என் பிதாவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதை நான் உங்களுக்குச் செய்வேன்'' என்னும் அவருடைய வாக்குதத்தத்துக்குள் பிரவேசிப்பார்களாக. அவர்கள் ”பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, பூஜ்யம்“ என்று எண்ணி, இவ்விடம் விட்டுச் செல்வார்களாக. அவர்கள் கட்டில்களில்லிருந்தும், டோலிகளிலிருந்தும் எழுந்து நடப்பார்களாக. அவர்களைக் கட்டிப்போட்டிருக்கும் வியாதியிலிருந்து அவர்கள் எழுந்திருந்து, மருத்துவர், விஞ்ஞானிகள், மற்றெவரும் ஒன்றுமே அறிந்திராத அந்த விண்வெளியை அடைவார்களாக. அந்த இடத்தில் தேவன் எப்பொழுதுமே தேவனாயிருக்கிறார். அவர் என்றென்றைக்கும் தேவனாக இருப்பார் என்பதை தேவனுடைய வல்லமையானது வேதாகமத்தின் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம், இல்லை, ஆவிக்குரிய ஆராய்ச்சியின் மூலம் வாக்களித்துள்ளது. அவர் என்றென்றைக்கும் தேவனாயிருப்பார். அவர் தமது வார்த்தையை நிறைவேற்றக் கூடிய முடிவற்றவர், சர்வ சக்திபடைத்தவர், சர்வ வல்லமையுள்ளவர், சர்வவியாபி. அவர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர். விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாவற்றையும் செய்ய வல்லவர். விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்று அவர் வாக்களித்துள்ளார். தேவனே, இதை அருளுவீராக. 79 தேவனுடைய வார்த்தையின் இறங்கு வரிசை எண்ணிக்கைக்கு செவிகொடுக்காமல் வழி தப்பித்திரியும் மனிதரும் ஸ்திரீகளும் பையன்களும் பெண்களும் இன்று காலை; நாம் கடைசி எண்ணிக்கைக்கு வந்து விட்டோம் என்பதை அறிந்திருக்கிறோம். எந்த நேரத்திலும் ''பூஜ்யம்'' என்று சொல்லப்பட்டு சபை போவதற்கு ஆயத்தமாயுள்ளது. செய்தி முடிவுபெறுவதை நாம் காண்கிறோம். நேற்றிரவு நாம் கூறினது போல் உபத்திரவம் பெருகுவதை நாம் காண்கிறோம். நேரம் சமீபமாயிருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். இறங்கு வரிசையின் எண்ணிக்கை முடிந்துவிட்டது. சபை காலங்களை ஜனங்களிடம் கொண்டு வந்து, எல்லாவற்றையும் எடுத்து அதை நிரூபிக்க இந்த மேடையின் மேல் எங்களுக்கு நீர் உதவிசெய்தீர். இப்பொழுது எந்த நேரத்திலும் அது சம்பவிக்கக் கூடும். வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த சர்வவல்லமையுள்ள தேவனே, உமது இரக்கங்களை ஜனங்களின் மேல் அனுப்பி, அவர்களுக்காக நீர் சேமித்து வைத்துள்ளவைகளை அவர்களுக்கு அருளுவீராக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 80 இப்பொழுது ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தலை வணங்கியிருக்கட்டும். இன்று காலை இங்குள்ள யாராகிலும் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக அறியாமலிருந்து, அவரை அறிந்துகொண்டு தேவனுடைய கிருபையினால் விண்வெளி வீரனின் நிலையை அடைந்து எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல விரும்பினால், உங்கள் கரங்களையுயர்த்தி, “சகோ. பிரன்ஹாமே, நான் ஆயத்தமாயிருக்கிறேன். நான் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஆயத்தமாயிருக்க விரும்புகிறேன். எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுவீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும். வெளியே, உள்ளே, நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் கரங்களை மாத்திரம் உயர்த்துங்கள். அதன் மூலம்,“தேவனே, என்னை உள்ளே இழுத்துக் கொள்ளும்” என்று சொல்லுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. “நான் இறங்கு வரிசை எண்ணிக்கையை கேட்க வேண்டும். அதை நான் கேட்க வேண்டும். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை அறிய விரும்புகிறேன். அக்கினி புறப்பட்டு செல்லும்போது நான் குதிரை வண்டியில் இங்கு உட்கார்ந்திருக்கப்போவதில்லை. நான் மோட்டார் வாகனம் ஓட்டும் சபையில் இருக்கப் போவதில்லை. நான் தரைக்கு மேல் எழும்பி குதித்து அதிக சத்தமிடும் சபையில் இருக்கப் போவதில்லை. என்னை சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் அப்பால் கொண்டு செல்லக்கூடிய சபையில் இருக்கவே விரும்புகிறேன். நான் இறங்கு வரிசை எண்ணிக்கையை கேட்க விரும்புகிறேன், ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் கோட்பாட்டை அல்ல. ஆனால் நான் கிறிஸ்துவில் இருந்து கொண்டு, மனித அறிவுக்கும் எட்டாத உயரத்துக்கு பயணம் செய்ய விரும்புகிறேன். நான் போக விரும்புகிறேன்” 81 நாம் ஜெபிப்பதற்கு முன்பு, வேறு யாராகிலும் உள்ளனரா? இளம் பெண்ணே , தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இளைஞனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, பின்னால் உள்ள உன்னையும். உன் கரத்தை நான் காண்கிறேன், தேவன் நிச்சயம் அதைக் காண்கிறார். என் சகோதரனே, உன்னையும் உன்னையும், சகோதரனே. “அந்த இறங்குவரிசை எண்ணிக்கையில் நான் இருக்க விரும்புகிறேன். தேவனே, பாரமான யாவற்றையும் நான் தள்ளிவிடட்டும்.'' சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ”நான் பாவம் அனைத்தையும் தள்ளிவிட விரும்புகிறேன். சகோதரனே, எனக்கு கோபம் அதிகம் வருகிறது. அதை வைத்துக்கொண்டு என்னால் அதில் செல்ல முடியாது. தேவன் அதை என்னை விட்டு எடுத்துப்போடும்படிக்கு ஜெபியுங்கள். சகோ. பிரன்ஹாமே, நான் சிறிது மது அருந்துகிறேன். அதைச் செய்ய எனக்குப் பிரியமில்லை. அதை நான் விட்டு விட வேண்டுமென்று ஜெபியுங்கள். நான் புகை பிடிக்கிறேன். அதைச் செய்ய எனக்குப் பிரியமில்லை. அதைச் செய்ய எனக்குப் பிரியமில்லை என்பதை தேவன் அறிவார். ஆனால் அது என்னைச் சிறைப்படுத்திவிட்டதால் அதைசெய்து கொண்டிருக்கிறேன். அதை விட்டுவிட என்னால் முடியவில்லை. அது தவறென்றும் அதை செய்யக் கூடாதென்றும் எனக்குத் தெரியும். வேறொரு காரியம், நான் வார்த்தையை சந்தேகித்து வந்திருக்கிறேன், அது உண்மைதானா என்று நான் வியந்ததுண்டு. தேவனே, எனக்கு உதவி செய்யும். சரியான எல்லாவற்றையும் நான் நினைவில் கொண்டு அதை விசுவாசிப்பேனாக நான் இறங்கு வரிசை எண்ணிக்கையை கேட்க விரும்புகிறேன். தேவனுடைய வார்த்தை ஒன்றைக் கூறுவதை நான் காணும்போது, அதை ''ஆமென்'' என்னும் சொல்லினால் ஆமோதித்து, ஆண்டவரே, அது நீர் என்று கூறும் நிலையை அடைய விரும்புகிறேன்.'' இப்பொழுது எல்லோரும் ... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் ஒவ்வொருவரையும். 82 இங்கு யாராகிலும் இன்று காலை வியாதிப்பட்டிருந்து, “சகோ. பிரன்ஹாமே, நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் நான்... நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். இப்பொழுது நான் ஆகாய விமானத்தை விட்டுக் கீழே இறங்கி, இறங்கு வரிசை எண்ணிக்கைக்கு ஆயத்தமாயிருக்கிறேன். நான் எல்லாவிதமான ஸ்தாபனங்களையும் விட்டு வெளியே வந்து, இறங்குவரிசை எண்ணிக்கையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது சகோ.பிரன்ஹாமே, இன்று காலையில் இந்த ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். நான் வியாதியாயிருக்கிறேன். நான் கர்த்தருக்காக இன்னும் சில ஊழியம் செய்ய வேண்டியதாயுள்ளது. நான் இறங்கு வரிசை எண்ணிக்கையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் சுகமடைய விரும்புகிறேன். நான் இறங்கு வரிசை எண்ணிக்கையை கேட்டுக்கொண்டே அந்த வாக்குத்தத்தத்தின் மேல் என் காலடியை வைக்கிறேன்” என்று கூற விரும்புகிறீர்களா? இறங்கு வரிசை எண்ணிக்கை என்பது என்ன? தேவனுடைய வார்த்தை . அது கீழ்வரைக்கும் எண்ணப்படுகிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். “அவர் சுகமளிப்பவர் என்பதை இன்று காலையில் கேட்க விரும்புகிறேன்; என் கைகளையுயர்த்தி 'சகோ. பிரன்ஹாமே எனக்காக ஜெபியுங்கள்' என்று கேட்டுக்கொள்ளப் போகின்றேன். ''தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது முன்னால் வாருங்கள். பீடம் ஜனங்களால் நிரம்பி வழிகின்றது, சுற்றிலும் ஜனங்கள், தரையிலும் கூட்டமாக. நம்மால் ஜெபவரிசையை வைக்க முடியாது. அவர்கள் சுவர்களைச் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் நின்றுகொண்டிருக்கின்றனர். நாம் மொத்தமாக கூடியிருக்கிறோம். நாம் ஜெபவரிசையை வைக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் அந்த நீங்கள் அந்த... நீங்கள் விண்வெளி வீரன். 83 நீங்கள் விண்வெளி வீரன். நீங்கள் லூத்தருக்கும் அப்பால் செல்கின்றீர்கள். லூத்தர் எல்லாவற்றையும் விசுவாசிக்கவில்லை. வெஸ்லி கைகளை வைத்து ஜெபம் பண்ணினார் பெந்தெகொஸ்தேயினர் எண்ணெய் பூசி ஜெபம் செய்கின்றனர். நீங்கள் விண்வெளி வீரர், மனித அறிவுக்கு அப்பால் சென்று விட்டீர்கள். வார்த்தை அவ்விதம் உரைப்பதால், நான் சென்று கொண்டிருக்கிறேன். நீங்கள், ''லூத்தர் விசுவாசிக்கவில்லையா? அது வார்த்தை இல்லையா?“ என்று கேட்கலாம். ஆம், ஆனால் வெஸ்லி அவரைக் காட்டிலும் மேலே சென்றார். ”நல்லது, வெஸ்லி எண்ணெய் பூசி ஜெபம் செய்தார், அப்படி ஏதோ ஒன்றை செய்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?“ ஆம், அது உண்மை . ''பெந்தெகொஸ்தேயினர் பிசாசுகளைத் துரத்தினர். ''ஆம். ”அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து சுகப்படுத்தினர்.'' ஆம், அது உண்மையென்று எனக்குத் தெரியும், ஆனால் தொடர்ந்து செல்லுங்கள். தொடர்ந்து செல்லுங்கள்! வெஸ்லி லூத்தரை பின் நோக்கிப்பார்க்கவில்லை, பெந்தெகொஸ்தேயினர் வெஸ்லியைப் பின்நோக்கிப் பார்ப்பதில்லை. நாமும் கூட பெந்தெகொஸ்தேயினரைப் பின் நோக்கிப் பார்ப்பதில்லை. நாம் விண்வெளி வீரர். நாம் அதைக் கடந்து சென்று விட்டோம். நாம் தொடர்ந்து செல்வோம். கிறிஸ்து அவ்விதம் கூறினார்! நீங்கள் எப்படி அதை செய்கிறீர்கள்? ''நீர் வந்து என் குமாரத்தியின் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது அவள் சொஸ்தமாவாள்“ என்றான் அந்த யூதன். இயேசு சென்று அவனுக்காக அதை செய்தார், அது உண்மை. ஆனால் விண்வெளி வீரனாகிய ரோமப் போர் சேவகன் விஷயத்தில், ”ஆண்டவரே, நீர் என் வீட்டுக்கு வருவதற்கு நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்“ என்றான். அவர் ஏற்கனவே அதை சொல்லிவிட்டார். அதுதான். 84 இப்பொழுது நமது இருதயங்களை தேவனிடத்தில் உயர்த்துவோம். நமது கரங்களை தேவனிடத்தில் உயர்த்துவோம், நமது இருதயங்களையும் அவரிடத்தில் உயர்த்துவோம். உங்களுடைய தேவை எதுவாயிருந்தாலும் - இரட்சிப்பு, பரிசுத்தமாக்கப் படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், தெய்வீக சுகம் பெறுதல் எதுவாயிருந்தாலும் உங்கள் கரங்களையுயர்த்தி உங்கள் இருதயங்களை தேவனுடைய சமுகத்தில் நிறுத்தி, நீங்கள் கிறிஸ்து இயேசுவில் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்றும், நீங்கள் அந்த விசுவாசத்தின் விண்வெளி வீரர் என்பதையும் உணருவீர்களாக. என்ன? இதோ எண்ணிக்கை வந்து கொண்டிருக்கிறது! “பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு....''ஓ இயேசுவே, இப்பொழுது வாரும்! நாங்கள் அவருடைய நாமத்தின் வல்லமையை முன்பு வைக்கிறோம். நேற்றிரவு நாம் கண்டது போல், பவுல் ஒரு மனிதனை குருடனாகும் படி சபித்தான்,ஆனால் வேறொருவன் தன் விருப்பம் போல் அவனை நடத்தும்படி விட்டுக் கொடுத்தான். இயேசு எல்லாவிதமான அற்புதங்களையும் செய்தாரென்று காண்கிறோம். ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பாதையின் முடிவில் அவர் அடிக்கப்பட்டார், முகத்தில் துப்பப்பட்டார். இவை எல்லாம் அவருக்குச் செய்யப்பட்டது. ஜனங்கள் அதை புரிந்து கொள்வதில்லை. அது உண்மையென்பதை உறுதிப்படுத்த தேவன் அதை செய்து, அதன் பிறகு ஜனங்களின் விசுவாசத்தை பரீட்சிக்கிறார். 85 கர்த்தாவே, நாங்கள் இங்கு நின்று கொண்டு முழுவதும் பார்வையிழந்தவர்கள் பார்வையடையவும், வியாதிகள்; ஜனங்களை நிழலிடும் புற்றுநோய்கள் குணமாவதையும் கண்டிருக்கிறோம். மரித்துப்போய் பல மணிநேரம் கிடத்தப்பட்டவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். அது எங்கள் மகத்தான கிறிஸ்து என்றும் அவருடைய சரீரத்தில் நாங்கள் ஒரு விண்வெளி வீரர் என்றும் அறிந்திருக்கிறோம். இப்பொழுது இறங்கு வரிசை எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது, இன்று காலை நாங்கள், எங்கள் சுகத்துக்காகவும், எங்கள் இரட்சிப்புக்காகவும், எங்கள் எல்லா தேவைகளுக்கும் விசுவாசிக்கப் போகின்றோம். ஏனெனில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் அதைக்கேட்டால் அவர், “என் நாமத்தில் நீங்கள் என் பிதாவை வேண்டிக்கொள்ளுவதெதுவோ, அதை நான் செய்வேன்” என்று வாக்களித்துள்ளார். எனவே இப்பொழுது நாங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று. அவருடைய நாமத்தைக் கூப்பிடுவதே, அது நடந்தேயாக வேண்டும். நாங்கள் இறங்கு வரிசை எண்ணிக்கையை கேட்டுக்கொண்டிருக்கிறோம். 86 கர்த்தாவே, பாவிகளாகிய சிலர் கைகளையுயர்த்தினர். அவர்கள் இறங்கு வரிசை எண்ணிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அவர்களுடைய இருதயத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டு, பழைய தீய காரியங்கள் எடுபட்டுபோம். புகை பிடிக்கும் பலர் அதை விட்டு விட ஆயத்தமாயுள்ளனர். செய்யத்தகாத செயல்களை புரிந்து வந்த பலர் அதைவிட்டு விட ஆயத்தமாயுள்ளனர். ஏனெனில் இன்று காலை சபைக்குத் தடையாயிருக்கும் எல்லாவற்றையும் —- வியாதியிலிருந்து பாவம் வரைக்கும் —- எடுத்துப்போட்டு இந்தசபை விடுதலையாகும்படி நாங்கள் சர்வவல்லமையுள்ள தேவனை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், வல்லமையும், சுவிசேஷத்தின் வல்லமையும், பரிசுத்த ஆவியின் அக்கினியும் சிதறத் தொடங்கி, தேவனுடைய மகத்தான விண்வெளி வீரர்கள் தங்கள் இருதயத்தின் வாஞ்சைக்கு இன்று பறந்து செல்வார்களாக. சர்வல்லமையுள்ள தேவனே, இதை அருளுவீராக. இவர்கள் உம்முடையவர்கள். இவர்கள் தங்கள் சுகத்தையும், தங்கள் இரட்சிப்பையும், தங்கள் தேவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்வார்களாக. இவர்களை உம்மிடம் ஒப்புவித்து, என் ஜெபத்துடன் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இன்று காலை புதியதாக உள்ள பலி பீடத்தின்மேல் கிடத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் கேட்டுக் கொண்டதைப் பெற்றுக்கொள்வார்களாக. அதற்கு ஜனங்கள் (சகோ. பிரன்ஹாமும் சபையோரும் சேர்ந்து “ஆமென்” என்கின்றனர்) 87 எனவே இதை விசுவாசியுங்கள்! அது அப்படியே ஆகக் கடவது! நான் இதை விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிக்கிறேன். ஆமென். அவர் தேவனென்று நான் அறிந்திருக்கிறேன். தேவனுடைய மகத்தான சாதனைக்கு நாம் ஆயத்தமாயிருக்கிறோமென்று நான் அறிந்திருக்கிறேன். அவருடைய சாதனை என்ன? பூமியை விட்டுச் செல்வது. விண்வெளி வீரன் சந்திரனுக்கு, வேறொரு பூமிக்குச் செல்கிறான். தேவனுடைய சபையோ (ஆகாய விமானத்திலிருந்து, குதிரை சவாரியிலிருந்து இப்படியாக) விண்வெளி வீரனாக வேறொரு உலகத்துக்கு செல்கிறது, அதுதான் பரலோகம். இறங்கு வரிசை எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. ஆமென். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? அப்படியானால் நாம் கரங்களையுயர்த்தி, “நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை...'' என்னும் பாடலைப் பாடுவோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்றிரவு உங்களை நான் காணும் வரைக்கும் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.”